இதுதான் நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க.. சென்னையில் வாடகை வீடு தேட இதுதான் சரியான நேரம்.. ஏன்?
சென்னை: சென்னையில் மழை பெய்து ஓய்ந்து உள்ள நிலையில் இதுதான்.. வீடு தேட சரியான நேரம் ஆகும். வாடகை வீடு தேடுபவர்கள் சென்னையில் இப்போது தேடலாம். இதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் பெரிய அளவில் மழை பெய்து ஓய்ந்து உள்ளது. சென்னைக்கு 440 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 530 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 11 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தும் கூட எங்கும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
காரணங்கள்; சென்னையில் மழை பெய்து ஓய்ந்து உள்ள நிலையில் இதுதான்.. வீடு தேட சரியான நேரம் ஆகும். வாடகை வீடு தேடுபவர்கள் சென்னையில் இப்போது தேடலாம். என்ன காரணம்?
1. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் வடிந்து உள்ளது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. இப்போதும் தண்ணீர் இருக்கும் வீடுகளை தவிர்ப்பது நல்லது.
2. சென்னையில் மின்சார பிரச்சனை இப்போது நிலவும் இடங்களை தவிர்ப்பது நல்லது.
3. சாலைகள் இந்த மழைக்கு எங்கெல்லாம் மோசமாக உள்ளதோ அங்கே வீடு வாடகைக்கு செல்வதை தவிர்க்கலாம்.
4. சில அப்பார்ட்மெண்டுகளில் மக்கள் வாகனங்களை லிப்ட் மூலம் வீடுகளுக்குள் கொண்டு சென்றுள்ளனர். அந்த இடங்களை தவிர்க்கலாம்.
5. சில இடங்களில் சாக்கடை நீர் நிரம்பி சாலைக்கு வந்துள்ளது. அந்த இடங்களையும் தவிர்க்கலாம்.
6. வெகு சில இடங்களில் மக்கள் உணவு வாங்க கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அது போன்ற இடங்களை தவிர்க்கலாம்.
மழை அளவு: திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. செங்குன்றம் 28 செ.மீ., ஆவடி 25 செ.மீ., தாமரைப்பாக்கம், பொன்னேரியில் தலா 16 செ.மீ. வெளுத்து வாங்கியது.
10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications