சென்னையில் மழை நீடிக்குமா? டோட்டலாக மாறிய கிளைமேட்.. வரும் நாட்களில் எப்படி? வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மழை 10 செமீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இன்றும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் போல வெப்பம் அனலாக தகித்தது. பிப்ரவரி மாத இறுதியில் கூட பல இடங்களில் வெயில் சதமடித்தது. இதனால் இப்போதே இப்படி இருக்கிறதே, ஏப்ரல் மே மாதங்களில் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சப்பட்ட நிலையில் இடையிடையே மழை பெய்து வெப்ப அனலை தணித்தது.

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை
தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒரு வாரமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. தலைநகர் சென்னையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. 10 செமீ அளவுக்கு மழை பெய்தது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 10 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது என்று தனியார் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை நகரம் குளிர்ந்தது.
இந்த நிலையில் இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
சென்னையில் இன்று எப்படி?
இதன் காரணமாக இன்று 17 ஆம் தேதி முதல் வரும் 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (17-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: இன்று 17-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்று 17-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 18-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications