வேலூர் டூ திருநெல்வேலி.. காலையிலேயே கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், சில மாவட்டங்களில் மழை கொஞ்சம் தீவிரம் எடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிவரை வேலூர் தொடங்கி திருநெல்வேலி வரை 11 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தின் தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

chennai rain tamil nadu

முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில், "நவ.4ம் தேதி காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் பங்களாதேஷ் கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, நவ.5ம் தேதி காலை 8.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பங்களாதேஷ் கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது இன்று வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும்.

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகஇன்று (நவ.6) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது. கனமழை

நவ.7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.8ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.9ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.10 மற்றும் 11ம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (06-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+