சென்னை+16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! காலை 10 மணி வரை உஷார்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் இன்று பெருமளவில் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம், கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. இது சென்னையை நோக்கி வரும் என கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி வந்த இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது சென்னையை ஒட்டி கரையை கடந்தது. எனவே சென்னையில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ரெட் அலர்ட் காரணமாக சென்னையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து வங்க கடலில் உருவான டான புயல், மழை மேகங்களை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கி இழுத்து சென்றது. இதனால் இடையில் சென்னையில் வெயில் பொளந்து எடுத்தது. இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 9-10 செ.மீ வரை மழை பதிவாகியிருந்தது. இதனால் வில்லிவாக்கம் பகுதியில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னையில் லேசான தூறல் போட்டியிருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், காலை 10 மணி வரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications