செம குளிர்+சாரல் மழை.. சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கான வானிலை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தனது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 14 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 58.5 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் 44 செ.மீ மட்டுமே மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது பெய்த மழை இயல்பை விட 33% அதிகமாகும். குறிப்பாக சென்னையில் 107.6 செ.மீ மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 34% அதிகமாகும். அதிகபட்சமாக என்று பார்த்தால் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்திருக்கிறது.

chennai rain tamil nadu

இந்நிலையில் தற்போது

சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகை
தஞ்சை
திருவாரூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மதியம் 1 மணி வரை சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், “இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன.1 முதல் 4 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 29-12-2024 மற்றும் 30-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை. 31-12-2024 முதல் 02-01-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜன.1 மற்றும் 2ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: இன்று முதல் ஜன.1 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. ஜஎன.2 குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+