சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! இரவு 7 மணி வரை உஷார்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக வட தமிழகத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலயில் இரவு 7 மணி வரை சென்னை உட்பட 21 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் மாதம் மத்தியில் வங்கக்கடலில் அந்தமான் நிகோபர் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியிருந்தது. இது வலுப்பெற்று புயலாக மறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த பகுதியாகவும் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் இன்று இது புயலாக வலுப்பெற தொடங்கியுள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடலூர் தொடங்கி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை புதுக்கோட்டை, ராமநாதபுரம் வரை மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது 7 மணி வரை 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிப்பரம்
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
விருதுநகர்
மதுரை
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல,
திருவண்ணாமலை
பெரம்பலூர்
திருச்சிராப்பள்ளி
தூத்துக்குடி
ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில், "தரைக்காற்று எச்சரிக்கை: 28-11-2024 & 29-11-2024 மாலை வரை: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-11-2024 மாலை முதல் 30-11-2024 மதியம் வரை: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான பெய்யக்கூடும். வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கனமழை மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications