பண்ருட்டியில் வன்முறை - போலீசார் துப்பாக்கிச் சூடு

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே இறந்து போனவரின் இறுதிச் சடங்கை நடத்துவதில் ஏற்பட்ட தகாராறின் போது நடந்த சாலைமறியலில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய கும்பலை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தியதில் 5 பேர்படுகாயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது பேர்பெரியான்குப்பம் என்ற கிராமம். இதே பஞ்சாயத்தைச்சேர்ந்தது முத்தாண்டிக்குப்பம் என்ற கிராமம்.

இந்த 2 கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இறந்து போனவர்களுக்கான இறுதிச் சடங்குகளை பேர்பெரியான்குப்பத்திலுள்ள அனந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் நடத்து வழக்கம். 1989ம் ஆண்டு முதலே இந்த இரண்டு ஊர்மக்களிடையே இறுதிச் சடங்குகள், ஈமக் காரியங்கள் நடத்துவதில் பிரச்சனை நிலவி வருகிறது.

இந்நிலையில் முத்தாண்டிக் குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இறந்து போனார். அவரது இறுதிச் சடங்குநேற்று (வியாழக்கிழமை) அனந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் நடைபெறும் என்று ராமலிங்கத்தின்குடும்பத்தினர் பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு கொடுத்திருந்தனர்.

இந்த பத்திரிக்கையில் பேர்பெரியான்குப்பம் கிராமத்தின் பெயர் குறிப்பிடப்படாததற்கு அந்த கிராம மக்கள்எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கிராமத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் பத்திரிக்கை அடிக்கப்பட்டுள்ளதால் அங்குவந்து இறுதிச் சடங்கு செய்யக்கூடாது என்றும் அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதிச்சடங்கு மால 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. இதை தடுப்பதற்காக பேர்பெரியான் குப்பத்தைச்சேர்ந்த 300 பெண்கள் கோவில் குளத்திற்கு செல்லும் வழியில் அமந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் நடைபெறப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு பலத்த போலீஸ் காவல்போடப்பட்டிருந்தது.

இரண்டு கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடமும் பண்ருட்டி துணை போலீஸ் கண்காணிப்பாளர்., பண்ருட்டிதாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முத்தாண்டிக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் இனி பேர் பெரியான் குப்பம் கிராமத்தின் பெயரை குறிப்பிட்டுதான்பத்திரிக்கை அடிப்போம் என்று எழுத்து மூலமாக உறுதி மொழி கொடுத்தால்தான், அவர்கள் கோவில் குளத்தில்இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பேர்பெரியான் குப்பம் மக்கள் கூறினர்.

இந்நிலையில் மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த அதிகாரிகளுடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைக்கும் பணியில் பெண் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது 200க்கும் மேற்பட்ட மக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை அடக்க முடியாமல்போனதால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். அது பலனில்லாமல் போகவே போலீசார் கும்பலை நோக்கிதுப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் பேர்பெரியான் குப்பத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (50), வடிவேல் (20), கமலக்ணீண்ணன் (19), சிவக்குமார்(25), வளையாபதி (25) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் வடிவேலுவைைத் தவிர மற்ற 4 பேரும் சென்னைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கல்வீச்சு சம்பவத்தில் 14 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 32 பெண்களிடமும், 8ஆண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 150 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமலிங்கத்தின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது.முத்தாண்டிக்குப்பம் மற்றும் பேர்பெரியான்குப்பம் பகுதிகளில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. Mail this to a friend  Post your feedback  Print this page 

Write a Comment
AIFW autumn winter 2015