திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு பரிந்துரை செய்துள்ளது என, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியிருக்கிறார்.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியா?, மற்ற கூட்டணியில் இணைவதா? அல்லது திமுக கூட்டணியில் கோரிக்கை ஏற்கப்பட்டால் தொடர்வதா? என்ற முடிவை தலைவர் என்ற முறையில் நான் எடுக்க, நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

DMK Alliance Under Review

வெறும் ஒரு தொகுதி

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இப்படி இருக்கையில் வேல்முருகன் இவ்வாறு பேசியிருப்பது, விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பன்ருட்டி சட்டமன்ற தொகுதியில் நின்று சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். போட்டியிட்டது என்னவோ தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்தான் என்றாலும், அவருக்கு ஒதுக்கப்பட்டது உதயசூரியன் சின்னம்தான்.

சின்னம் முக்கியம்

கடந்த 5 ஆண்டுகளில், திமுகவுடன் பல விஷயங்களில் வேல்முருகன் முரண்பட்டு வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், எதிர்வரும் தேர்தலில், திமுக கூட்டணியில் தொடர வேண்டும் எனில், 3-5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், அதுவும் தனது சொந்த கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் எனவும் கூறியிருக்கிறார். ஆனால், திமுக 1 தொகுதியை மட்டும் ஒதுக்க முன் வந்திருக்கிறது. மட்டுமல்லாது உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இதனை வேல்முருகன் ஏற்கவில்லை. தொகுதி பங்கீட்டில் சமரசம் செய்துக்கொண்டாலும் கூட, சின்னம் விஷயத்தில் இறங்கி வர வேல்முருகன் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.

மறுபரிசீலனை

அதில், திமுக கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு பரிந்துரை செய்துள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, "கூட்டணியில் இருக்கும் எங்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். கடலூர் மாநகராட்சி மேயர் அல்லது துணை மேயர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை கேட்டிருந்தோம். ஆனால் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

தொகுதி பங்கீடு

இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை இதற்கான பதில் திமுக தரப்பிலிருந்து வரவில்லை. ஏற்கெனவே அந்தந்த கட்சிகள் போட்டியிட்ட எண்ணிக்கையில்தான், இந்த முறையும் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக பேச்சுவார்த்தை குழு தெரிவித்திருந்தது. மட்டுமல்லாது கடந்த முறை ஒதுக்கிய தொகுதியிலிருந்து, இந்த முறை ஓரிரு எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள கட்சிகளை வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

10 கோரிக்கைகள்

நாங்கள் எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு முக்கியமானதாக இருக்கும் 10 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது குறித்து உறுதியளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். ஆனால், எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை" என்று கூறியிருக்கின்றார்.

வெளியேறும் தவாக

தமிழக வாழ்வுரிமை கட்சியை பொறுத்தவரை, சின்னம் ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறது. ஒரு தொகுதியை வாங்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை விட.. தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடலாம் என மாவட்ட செயலாளர்கள் கொந்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொந்த கட்சியின் அடையாளத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் இருக்கிறது. எனவே இந்த தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து அநேகமாக தவாக வெளியேறலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+