For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாத்மா காந்தியும் நானும் ஒன்னு, இது அறியாதவன் வாயில மண்ணு.. சிவசேனா எம்.பி.யின் பேச்சை பாருங்க

ஏர் இந்தியா ஊழியரை 25 முறை காலணியால் அடித்த சிவசேனா எம்.பி.ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விமானங்களில் ஏற்ற மறுப்பதை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு பேசினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியா ஊழியரை காலணியால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தன்னை விமானங்கள் ஏற்ற மறுப்பதை தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளை ரயிலில் இருந்து இறக்கிய சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வார். கடந்த 23-ஆம் தேதி புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

பிசினஸ் வகுப்பில் டிக்கெட் எடுத்துவிட்டு எகானமி வகுப்பை சேர்ந்த இருக்கையில் கெய்க்வாட் பயணம் செய்தார். டெல்லி விமான நிலையம் வந்தப் பிறகும் விமானத்தில் இருந்து இறங்காமல் அதிலேயே அமர்ந்திருந்தார்.

காலணியால் அடித்தார்

காலணியால் அடித்தார்

இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஏர் இந்தியா மேலாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார், எம்பியை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது வெறிபிடித்தது போல் மேலாளரை தன்னுடைய காலணியால் கெய்க்வாட் 25 முறை அடித்தார்.

விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுப்பு

விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுப்பு

கெய்க்வாட் எம்.பி.க்கு கடும் கண்டனம் தெரிவித்த விமான நிறுவனங்கள் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக விமானத்தில் அவரை அனுமதிக்க தடை விதிப்பதாக இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் புனேவிலிருந்து டெல்லி வரை காரிலேயே பயணம் செய்தார்.

லோக்சபையில் அமளி

லோக்சபையில் அமளி

விமான நிறுவனங்களின் இத்தகைய செயல் குறித்து லோக்சபாவில் சிவசேனா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற ஒரு தடை நடவடிக்கையானது நீடித்தால், மும்பையில் இருந்து ஒரு விமானத்தையும் இயக்க விடமாட்டோம் என்றனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது விமான நிறுவன மேலாளரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவரை விமானத்தில் ஏற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

காந்தியுடன் ஒப்பீடு

காந்தியுடன் ஒப்பீடு

அதற்கு கெய்க்வாட், நான் விமான ஊழியரை அடித்ததற்காக லோக்சபாவில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் ஊழியரிடம் கேட்க முடியாது. நான் எந்த தவறும் செய்ய வில்லை. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளை ரயிலில் இருந்து இறக்கினர். தற்போது என்னை விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கின்றனர் என்றார் அவர். காந்தியுடன் தன்னை சிவசேனை எம்.பி. ஒப்பிட்டு பேசும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Ruckus in Lok Sabha after Shiv Sena MPs protest flying ban on Ravindra Gaikwad. He also compared his ban with Mahatma Gandhi's incident who was got down from train in South Africa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X