ஜெ. வழக்கில் சு.சுவாமி எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதாட அனுமதி, நேரடியாக முடியாது- நீதிபதி அதிரடி!
பெங்களூரு: ஜெயலலிதா மேல் முறையீட்டு விசாரணையில், சுப்பிரமணியன் சுவாமி நேரடியாக வாதிட அனுமதிக்க முடியாது என்று கூறிய கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு பெஞ்ச், அவர் பவானிசிங்கிற்கு உதவியாக எழுத்துப் பூர்வமாக வாதத்தை முன்வைக்க அனுமதி கொடுத்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதில் அன்பழகன் மனுவை முற்றாக புறக்கணித்த நீதிபதி குமாரசாமி, சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கையில் ஒரு பகுதியை நிராகரித்து, ஒரு பகுதிக்கு அனுமதி கொடுத்தார்.
நீதிபதி குமாரசாமி கூறியதாவது: சுப்பிரமணியன் சுவாமி வழக்கின் முதல் புகார்தாரர் என்று குறிப்பிடப்படுவதால், அவரை வழக்கில் இணைத்துக்கொண்டு 3வது நபராக செயல்பட அனுமதிக்கலாம். அரசு வக்கீலுக்கு அவர் உதவிகரமாக செயல்படலாம். ஆனால் தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாகவே அவர் அளிக்க வேண்டும். வாய்மொழியாக வாதிட அனுமதி கிடையாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
The Karnataka HC has accepted one of my two prayers viz., can file Written Submissions in the case.But not oral arg. I will go to SC on this
— Subramanian Swamy (@Swamy39) February 5, 2015 இதனிடையே, வாய்மொழி வாதாடலுக்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக சு.சுவாமி கூறியுள்ளார். அன்பழகன் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications