ஜெ. சிறை தண்டனையை கண்மூடித்தனமாக ரத்து செய்தார் நீதிபதி குமாரசாமி- கர்நாடகா வக்கீல் தவே
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கண்மூடித்தனமாக ரத்து செய்தது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் 23ம் தேதி முதல் விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது திடீரென மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா ஆஜரானார். அவர் இந்த மேல்முறையீட்டு மனுவையே உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது; கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரிக்க முடியும் என வாதிட்டார்.
இதை தனி மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதி வாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.

காரணமே சொல்லலை
இதைத் தொடர்ந்து தவே முன்வைத்த வாதம்:
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை (நீதிபதி குன்ஹா தீர்ப்பை) கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கண்மூடித்தனமான ரத்து செய்துள்ளது. எதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்பதற்கான காரணம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்படவில்லை.

சொத்து மதிப்பை குறைத்த ஹைகோர்ட்
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பதை முதலில் ஏற்றுக் கொண்ட கர்நாடகா உயர்நீதிமன்றம் பின்னர் அந்த சொத்துக்களின் மதிப்பை வெகுவாக குறைத்துவிட்டது. எதற்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் இப்படி செய்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கர்நாடகா வாதத்தை கேட்கவில்லை...
ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது தவறுதான் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் முதலில் கர்நாடகா அரசை ஒருதரப்பாகவே சேர்க்கவில்லை. பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட நிலையில் ஒரே ஒரு நாள் வாதிட அனுமதித்தது. அதுவும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதங்களை முன்வைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதித்திருந்தது. எதற்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) இப்படி செய்ய வேண்டும்?

தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் முழுவதுமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகையால் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனை விதித்த விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

வருமானத்தை விட 76.7% சொத்து குவிப்பு
ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பில் தவறாக மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பே ரூ16.32 கோடி. இது ஜெயலலிதாவின் வருமானத்தை விட 76.7% அதிகம். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ வருமானத்துக்கு அதிகமாக 8.12%தான் சொத்து குவித்திருக்கிறார்; 1977ஆம் ஆண்டு கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கின் தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமாக 10% சொத்து குவித்திருந்ததால் விடுதலை செய்யப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது தவறானது. ஏனெனில் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கு சில லட்சங்கள் தொடர்புடையது; ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கோ வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குவித்தார் என்பதாகும்.

கடன்கள் வருமானமாகாது
பரிசுப் பொருட்கள், கடன்களை வருமானமாக கருத முடியாது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ, கடன்களையும் வருமானமாகக் கருதி ஜெயலலிதாவின் சொத்தை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. வருமான வரி செலுத்துவிட்டதாலேயே ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகள் முறையானவையாகிவிடாது.
இவ்வாறு தவே வாதிட்டார்.

பிவி ஆச்சார்யா
மேலும் தவே தம்முடைய வாதத்தை இன்று மாலை 4 மணியுடன் நிறைவு செய்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பாக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகி வாதாட இருக்கிறார்; அவர் 3 நாட்கள் தம்முடைய வாதத்தை முன்வைப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தவே தெரிவித்தார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications