ஜல்லிக்கட்டு தடையை நீக்க முடியாது.. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்க வேண்டும் எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட 3 மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2011ம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால், காட்சிப்படுத்துதல் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட நிலையில், 2014ம் ஆண்டு மே மாதம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கும் விதமாக கடந்த 7ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்கு தடை கோரி விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அதன் அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்சநீதிமன்றம் கடந்த 12ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடைக்கு எதிரான சீராய்வு மனுவை மறுநாளே தள்ளுபடியும் செய்தது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 2014ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, ஜே.கே.ரித்தீஷ், ராஜசேகரன், பாரம்பரிய விளையாட்டு கழகம் ஆகியவற்றின் சார்பில்
மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மூன்று மனுக்களும், நீதிபதிகள் கோபால் கவுடா மற்றும் பினாக்கி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சீராய்வு மனுவை விசாரிக்க முடியாது என கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
எனவே, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அதற்கான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்வதுதான் இப்போது எஞ்சியுள்ள ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.
60 sec: 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்க வேண்டும் எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட 3 மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அதற்கான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்வதுதான் இப்போது எஞ்சியுள்ள ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications