'தப்பு கணக்கு' விவகாரம் விஸ்வரூபம்.. ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கோர ஆச்சாரியா திட்டம்!
பெங்களூரு: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில், கடன் தொகை தவறாக மதிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், கோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால தடை வாங்க தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அரசு வக்கீல் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நீதிபதியே குறிப்பிட்ட கடன் தொகையை கூட்டி பார்த்தால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும்.

ஆனால் நீதிபதியோ, இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில்தான் வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா 8.12 சதவீதம் மதிப்புக்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், உண்மையான கடன் தொகையை வைத்து கணக்கிட்டு பார்த்தால் வருமானத்தைவிட 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளது தெரியவருகிறது.
இந்நிலையில்தான், நீதிபதி தனது தீர்ப்பின் மையப்புள்ளியாக கொடுத்த அந்த 8.12 சதவீத பாயிண்ட்டில் தவறு உள்ளதை எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டால், இந்த ஓட்டை பெரும் பின்னடைவை ஜெயலலிதா தரப்புக்கு ஏற்படுத்தும். கீழ்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இதையெல்லாம் பரிசீலித்து கூட்டி கழித்து கணக்கு சரியாக போட்டுள்ளதையும், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்தரப்பு எடுத்து வைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அரசு வக்கீல் ஆச்சாரியா கூறுகையில், "கூட்டல் கணக்கில் பிழை உள்ளது. எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால் அப்போது, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுக்க தீவிரமாக பரிசீலிக்கப்படும். அப்போது இந்த பாயிண்ட் மிகவும் உதவும்" என்றார்.

ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்தால், ஜெயலலிதாவால் முதல்வராக பதவி வகிக்க முடியாத சட்ட சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications