தம்பி மகன் தான் மாப்பிள்ளை.. மகளுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்த பாக். தளபதி! சகோதரன் முறை வருமே!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரின் மகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. தம்பி மகனைத் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார் முனீர். டிசம்பர் 26ம் தேதி திருமணம் நடந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் போட்டோ எதுவும் வெளியாகவில்லை. மேலும், திருமணம் ரகசியமாகவே நடந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு மோதல் ஏற்பட்டபோது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளை அசிம் முனீர் தான் வழிநடத்தி இருந்தார். அந்த மோதலில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்திருந்தது. ஆனாலும், மோதலில் வென்றதாகச் சொல்லி, பாகிஸ்தான் மக்களை நம்ப வைத்தார் அசீம் முனீர்!

பாகிஸ்தான் தளபதி மகள் திருமணம்
அந்த மோதலைத் தொடர்ந்து அவருக்கு பீல்டு மார்ஷலாக கூட பதவி உயர்வு தரப்பட்டது. அந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரின் மகள் மஹ்னூருக்கு திருமணம் நடந்துள்ளது. முனீர் தனது சகோதரன் மகன் அப்துல் ரஹ்மான் என்பவருக்கே தனது மகளைத் திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த டிசம்பர் 26ம் தேதி ராவல்பிண்டியில் இந்த திருமணம் நடைபெற்றது.
ரகசிய திருமணம்
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ள நிலையில், அங்கு தான் முனீரின் மகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமண நிகழ்வில் பாகிஸ்தான் நாட்டின் உயர் அரசியல் மற்றும் ராணுவப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் திருமண விழா ரகசியமாக நடத்தப்பட்டது. திருமணம் குறித்த போட்டோக்கள் கூட வெளியிடப்படவில்லை.
ஜெனரல் முனிருக்கு மொத்தம் நான்கு மகள்கள் உள்ளனர். அதில் மூன்றாவது மகளின் திருமணம் இதுவாகும். இந்தத் திருமண விழாவில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், துணைப் பிரதமர் இஷாக் தர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இதில் ஐஎஸ்ஐ தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சகோதரன் மகன்
மணமகன் அப்துல் ரஹ்மான், ஜெனரல் முனிரின் சகோதரன் மகனாவார். ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய அப்துல், இப்போது ராணுவ அதிகாரிகளுக்கான ஒதுக்கீட்டில் சிவில் சர்வீஸில் இணைந்து உதவி ஆணையராக இருக்கிறார். இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தியாளர் ஜாஹித் கிஷ்கோரியின் கூறுகையில், "சுமார் 400 விருந்தினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர். பாதுகாப்பு காரணங்களால் எளிமையாக இந்தத் திருமணம் நடந்தது" என்றார்.
வழக்கம் தான்
இஸ்லாம் மதத்தில் உடன் பிறந்தவரின் பிள்ளைக்கு மகனை அல்லது மகளைத் திருமணம் செய்யும் முறை பொதுவானது. மத நூல்கள் அதைத் தடை செய்யாத நிலையில், பரவலாகவே இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறது. கலாச்சார மரபுகளிலும் வேரூன்றியுள்ளது.. தலைமுறை தலைமுறையாக இதுபோல நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்தால் பிறக்கும் பிள்ளைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்று தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அசிம் முனீர்
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அசிம் முனீருக்கான பவர் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. முனீருக்கு அதிகாரம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் மதத் தீவிரவாதம் நோக்கிச் செல்வதாக உலக நாடுகள் அஞ்சுகின்றன. உள்நாட்டில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டதாகப் பல்வேறு தரப்பும் சாடி வருகின்றன.
முனீர் தலைமையிலான பாகிஸ்தான் பாதுகாப்புப் படை 2025ல் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தது. முதலில் இந்தியாவிடம் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அடி வாங்கியது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டது. அதிலும் பாகிஸ்தானுக்குக் கடும் சேதம் ஏற்பட்டது. இதுபோக உள்நாட்டிலும் பாலூசிஸ்தானில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு பலூச் போராளிகளும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இப்படி எல்லாப் பக்கத்தில் இருந்தும் பாகிஸ்தான் கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications