பொறுப்பில் இல்லாத சசிகலாவை முதல்வர் ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம்? வெடிக்கும் புதிய பஞ்சாயத்து
அதிமுகவில் எந்த ஒரு பொறுப்பிலுமே இல்லாத தனிநபர் சசிகலாவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக போய் சந்திப்பது எப்படி மரபாகும்? என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை: அதிமுகவில் எந்த ஒரு பொறுப்பிலுமே இல்லாத அதுவும் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? என்பது கூட தெரியாத சசிகலா என்ற தனிநபரை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பது எப்படி மரபாகும்? என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
2011-ம் ஆண்டு அதிமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் என்ற பதவியுடன் இருந்த சசிகலா நீக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழைந்தார்.

அடிப்படை உறுப்பினரா?
ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டாரா? மீண்டும் தலைமை செயற்குழு உறுப்பினராக சசிகலா நியமிக்கப்பட்டாரா? என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என ஜெயலலிதா கடைசியாக அறிவித்த பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறவே இல்லை. இதைத்தான் சசிகலா புஷ்பா தரப்பு தங்களுக்கான சாதக அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கிறது.

விரும்பாத டெல்லி
இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக சென்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்துவதை டெல்லி மத்திய அரசு வெளிப்படையாகவே விரும்பவில்லை எனக் கூறிவிட்டது. இதனால்தான் டெல்லியில் இருந்து திரும்பிய பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தார். இதை அதிமுகவினரே ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர்.

திடீர் சந்திப்பு
இதனிடையே திடீரென நேற்று ஓ. பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்தது பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதெப்படி சந்திக்கலாம்?
அதிமுகவில் உறுப்பினரா? இல்லையா? அவரால் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்விகளுக்கே பதில்தராத ஒரு தனிநபரை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பது மரபுகளுக்கு எதிரானது; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறுவதாகும் என்பதுதான் புதிய பஞ்சாயத்து. இதற்கும் ஒரு வழக்கு போடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது சசிகலா எதிரணி என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications