இயக்குனர் திருலோகச்சந்தர் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்!
சென்னை: இயக்குநர் ஏ.சி திருலோகச்சந்தரின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகச்சந்தர் (86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

மறைந்த திருலோகச்சந்தரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, திருலோகச்சந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ''பழம்பெரும் இயக்குனரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், தனிப்பட்ட முறையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவருமான அருமை நண்பர் ஏ.சி. திருலோகசந்தர் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
சுமார் 60க்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பதும், அவர் நடிகர் திலகம் நடித்த 25க்கு மேற்பட்ட திரைப்படங்களை, குறிப்பாக "ஆஸ்கர்" விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு குறித்து, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications