வெற்றி மீது வெற்றி வந்து இவரைச் சேரும்.. 13வது முறையாக வென்ற கருணாநிதி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இதுவரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். திருவாரூர் தொகுதியில் அவர் 2வது முறையாகவும், சட்டசபைத் தேர்தலில் 13வது முறையாகவும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
கருணாநிதி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அதில் ஒன்று 12 முறை சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்றது. தற்போது 13வது முறையாக தேர்தல் களம் கண்டுள்ள கருணாநிதி அதிலும் வென்றுள்ளார்.

1957ம் ஆண்டு தனது முதல் தேர்தலை குளித்தலைில் சந்தித்தார் கருணாநிதி. அன்று முதல் அதன் பிறகு அவர் சந்தித்த ஒவ்வொரு தேர்தலையும் அவர் வென்று வந்துள்ளார்.
1962 - தஞ்சாவூர்
1967 - சைதாப்பேட்டை
1971 - சைதாப்பேட்டை
1977 - அண்ணா நகர்
1980 - அண்ணா நகர்
(1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் எம்எல்சியாக இருந்தார்)
1989 - துறைமுகம்
1991 - துறைமுகம்
1996 - சேப்பாக்கம்
2001 - சேப்பாக்கம்
2006 - சேப்பாக்கம்
2011- திருவாரூர்
2016 - திருவாரூர்
தமிழகத்தில் எந்தத் தலைவரும் இதுவரை இத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றதில்லை. அந்த வரலாற்று சாதனையை இனி யாரேனும் படைப்பார்களா என்பதும் தெரியவில்லை. அந்த வகையில் கருணாநிதியின் இந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாகும்.
13 தேர்தல்களில் வென்றுள்ள கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தும் சாதனை படைத்தவர். தற்போது 6வது முறையாக அவர் முதல்வர் பதவியை ஏற்று வரலாறு படைப்பார் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அது ஏமாற்றத்தில் போய் முடிந்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications