Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேசவரலாம்: பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அதாவது விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையலாம் என்பதை பிரேமலதா சுட்டிக் காட்டியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டின் இறுதியில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

Premalatha invites other parties

அவர் அறிவித்துவிட்டு அமர்ந்த பின்னர் மைக் பிடித்த பிரேமலதா, விஜயகாந்த்தை முதல்வராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம்; திமுக, அதிமுகவுக்கு மாற்றம் தேவை என கருதும் கட்சிகள் பேசலாம் என்றார்.

ஆக தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்த போதும் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையக் கூடும் என்பதை சூசகமாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+