மயக்கமா, கலக்கமா.. மனதிலே நடுக்கமா.. சசி குரலிலும், முகத்திலும் ஒரு பீதி தெரியுதே!!
கடந்த சில நாட்களாக காணப்பட்ட பிரகாசம் குறைந்து சசிகலா முகத்தில் ஒரு விதமான நடுக்கம் தெரிவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
சென்னை கடந்த 2 நாட்களாக சசிகலாவின் குரலில் பீதி தெரிகிறது. அவரது முகம் இருண்டுள்ளது. நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் வகையில் அவர் காணப்படுகிறார்.
முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டும் என சசிகலா பிடிவாதமாக உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தமிழக மக்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற நாள் முதல் எழுதி வைத்தே படித்து வந்த சசிகலா கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் ஓபிஎஸ் கூறிய அதிரடி குற்றச்சாட்டுகளால் நள்ளிரவு ஒன்றேகால் மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

கண்களை உருட்டி புருவங்களை உயர்த்திய சசி
முதல் முறையாக செய்தியாளர்களை எந்த பேப்பரும் இன்றி சந்தித்த அவர் கண்களை உருட்டி புருவங்களை உயர்த்தி மிக தைரியமாக பேசினார். ஓபிஎஸ் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்க்கமாக கூறினார்.

பேச்சில் தெனாவட்டு
எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் அவருக்கு சாதகமாக இருந்ததால் அவர் பேச்சில் தெனாவட்டு தெரிந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் அணிக்கு மாறும் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மன்னார்குடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளது.

முகத்தில் தெளிவு இல்லை
கடந்த 2 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கும் சசிகலாவின் முகத்தில் தெளிவு இல்லை. எதையோ பறிகொடுத்தது போன்ற சோகம் ஆட்கொண்டு அவரது முகத்தில் இருள் சூழ்ந்துள்ளது.

குரளில் நடுக்கம், தழுதழுப்பு
அவ்வப்போது குரலை உயர்த்தி பேசினாலும் குரலில் ஒரு நடுக்கமும் தழுதழுப்பும் தெரிகிறது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் மன்னார்குடி கும்பலுக்கு பீதி ஏற்பட்டதன் வெளிப்பாடும், ஆட்சியமைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பீதியும் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ ஜெயலலிதாவின் முன்னாள் தோழி?
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications