பாலில் விழத் தவறிய பழம்!
சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது.
தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம் கனிந்து வருகிறது பாலில் வந்து விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நச்சு கலந்த பாலில் பழம் விழுந்து பயனில்லை என்று கூறியிருந்தார்.
பாஜக தலைவர் தமிழிசையோ, பாலில் விழுகிறது, கீழே விழுகிறதோ அதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனித்துப் போட்டி என்று கூறி அத்தனை பேரையும் (அரசியல் கட்சித் தலைவர்களை) ஏமாற்றி விட்டார் விஜயகாந்த். மொத்தத்தில் பழம் எங்கேயும் விழாமல் போய் விட்டது...!
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications