கடனை திருப்பி செலுத்த வங்கி அதிகாரிகள் நெருக்கடி.. விவசாய சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன் தற்கொலை
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வங்கி அதிகாரிகள் நெருக்கடிகள் கொடுத்ததால் மனம் உடைந்த விவசாயி வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த வேம்புகிருஷ்ணன் தற
திருநெல்வேலி: தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இன்று நெல்லை மானூரில் விவசாயிகள் சங்கத் தலைவரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. அப்பகுதி மக்களை சோகமடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போய் பயிர்கள் கருகி நாசமானதால் சுமார் 250 விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் மரணம் அடைந்துள்ளனர்.
ஆனால், தமிழக அரசு சார்பில் வெறும் 17 விவசாயிகள்தான் மரணம் அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்திற்கான நிவாரணத் தொகையும் மிகக் குறைவாகவே அறிவித்துள்ளது.

வங்கிக் கடன்
இந்நிலையில், நெல்லை மானூரைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார், நெல்லை மானூரைச் சேர்ந்த விவசாயி வேம்புகிருஷ்ணன், சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ளார். இவர் விவசாயத்திற்காக வங்கியிடம் கடன் வாங்கியுள்ளார். மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப் போன நிலையில் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
அதிகாரிகள் நெருக்கடி
இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் வேம்புகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து பணத்தை கட்டும்படி தொல்லை கொடுத்துள்ளனர். விவசாயி வேம்பு எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மேலும் மேலும் நெருக்கடி கொடுத்துள்ளனர் வங்கி அதிகாரிகள்.
மனம் உடைந்து தற்கொலை
வங்கி அதிகாரிகளின் தொடர் நெருக்கடியால் என்ன செய்வது என்று தெரியாத விவசாயிகள் சங்கத் தலைவரான வேம்புகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மன உலைச்சலால் வேம்பு இன்று தற்கொலை செய்து கொண்டு மாண்டார்.
அதிர்ச்சி
விவசாய சங்கத் தலைவரே வங்கி அதிகாரிகளின் நெருக்கடியால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மானூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இனியும் விவசாயிகள் மரணங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications