விவசாய விளை பொருட்களின் எதிர்காலம் என்ன?
ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் விவசாய விளை பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து,விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இந்த அதிருப்தி வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்குஅரசின் பொருளாதார அணுகுறை குறை கூறப்பட்டுள்ளது.
நாட்டின் விவசாயப் பொருளாதார அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம் விவசாயிகளிடையே அச்சத்தைஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தைப் பொருளாதாரம் வரும்போது இதை எதிர்கொள்ள விவசாயிகள் எந்தநிலையிலும் ஆயத்தமாக இல்லை. இவர்களுக்கு வழிகாட்டவோ, என்ன செய்ய வேண்டும் எனக் கூறவோ, எந்தஅமைப்பும் முன் வரவில்லை.
தென்னை
கோவை மாவட்டத்தில் தென்னை அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உடுமலை போன்ற பகுதிகளில்தென்னை பயிராகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வசதி பெற்றுள்ள இந்தப் பகுதிகளில், தென்னை ஒன்றுமட்டுமே விவசாயிகளின் விடி வெள்ளியாக இருந்தது.
இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதியில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பலஆண்டுகளாகவே இந்த தென்னை சாகுபடி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வந்துள்ளது.
முதலாவதாக கடந்த 96-97 ம் ஆண்டுகளில் கடும் வறட்சி ஏற்பட்டதையடுத்து, தென்னை மரங்கள் கருகின.இதனால் தென்னை மகசூல் குறைந்து விலை உயர்ந்தது. விளைச்சல் இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு இந்தவிலை கைகொடுக்கவில்லை. இந்நிலையில், அடுத்த ஒராண்டில் மழை பெய்தபோது, தென்னைக்கு உயிர்கொடுப்பதா க அமைந்தது.
ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 1999ம் ஆண்டு ஈரியோபைடு என்ற நோய்த்தாக்குதலுக்குள்ளானது. இதனால் தென்னையின் ஓலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. சில நாட்களில்தோங்காய் பிஞ்சுகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, விளைச்சல் பாதிப்படைந்தது. இந்த நோயிலிருந்துதென்னை இதுவரை மீளவில்லை.
எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டும், தென்னைக்கு பயனளிக்கவில்லை. இருந்தபோதிலும்,தென்னையின் மகசூல் பாதிக்கப்படவில்லை. ஆனால், வெளிநாடுகளிலிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதிக்குஅரசு அனுமதித்ததால், தேங்காய் எண்ணெயின் பயன்பாடு குறைந்தது.
இதனால் தேங்காய் எண்ணெய்யின் விலை மற்றும் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சியால்,விவசாயிகள் பாதிப்படைந்தனர். கொப்பரை எனப்படும் தேங்காய் பருப்பு விலை குறைந்தது. இதனால்விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.
இந்த பருப்பின் விலை கிலோ ஒன்றிற்கு 22 ரூபாய் 50 பைசாவிற்கும் குறைவானது. தேங்காயின் விலை ரூ. 1.50முதல் 2 ரூபாய்க்கு சரிந்தது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பையடுத்து, அரசு கொப்பரைத் தேங்காய்எனப்படும், தேங்காய் பருப்பை கொள்முதல் செய்ய முடிவு செய்தது.
இந்த தேங்காய் பருப்பு கொள்தல் விலையை அரசு 32 ரூபாய் 50 பைசாவாக நிர்ணயித்து கொள்முதல் செய்தது.இந்தக் கொள்முதலில், இடைத் தரகர்கள் விவசாயி போன்று போலியாக பெயர்களைப் பதிவு செய்து பல லட்சரூபாயை சுருட்டிக் கொண்டனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்தே அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்தப் பிரச்னையைக் கையாண்டது. இதில், அரசுஅதிகாரிகளும் பல ஆயிரங்களை சுரண்டியுள்ளனர். எனவே, தேங்காய் விலை வீழ்ச்சியை சரிகட்ட மத்திய அரசுகோடிக்கணக்கான நிதியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேங்காய் விலை கடுமையாக வீழச்சியடைந்த போதிலும் நகரங்களில் இந்த பாதிப்பு எந்த விதத்திலும்எதிரொலிக்கவில்லை. தேங்காய் விலை 1.50 பைசாவாக இருந்தபோதிலும், எப்போதும் விற்பனையாகும்இளநீரின் விலை ரூ.5லிருந்து ரூ.7 வரை உயர்ந்தது.
விவசாயிகள் நேரடியாக விற்பனைக்கு காய்களைக் கொண்டு வரவில்லை. எனவே, இந்த வகையிலும்இடைத்தரகர்களின் லாபம் தான் அதிகரித்தது. பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்படைந்தனர்.
இந்தப் பிரச்னையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல விவசாயிகள் போராட துணிந்தாலும் போதுமானஒற்றுமை இன்மையால் அடங்கிப் போனது. ஆனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் வருத்தம்அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும் என நம்புகின்றனர் லோக்கல் அரசியல்வாதிகள்.












Click it and Unblock the Notifications