நிலைமை மோசம்.. பெங்களூரை அலறவிடும் பன்றிக்காய்ச்சல்.. ஒரே இடத்தில் 500+ பாதிப்பு! புதிய வார்னிங்

  • பெங்களூர்: இந்தாண்டு டெல்லியில் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பெங்களூரிலும் திடீரென இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும், இப்போது இந்தியாவில் பரவும் பன்றிக் காய்ச்சல் புதிய வகை வைரஸ் இல்லை என்பதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

    Advertisement

    இந்தாண்டு தொடக்கம் முதலே டெல்லியில் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வரை மட்டும் டெல்லியில் 1,777 H1N1 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு டெல்லியில் பதிவான இன்ஃப்ளுயன்சா பாதிப்புகளில் பெரும்பாலானவை H1N1ஆக உள்ளன.

    Advertisement

    புதிய வகை இல்லை

    இந்தியாவில் பரவி வரும் H1N1 வைரஸ் புதிய வகையை சேர்ந்தது அல்ல என்றும், அது இப்போது பரவும் சீசன் பாதிப்புடன் ஒத்துப்போவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஆனால் பெங்களூரில் நிலை சற்று வித்தியாசமானது. ஏனென்றால் பெங்களூர் பல இடங்களில் கொத்து கொத்தாக பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டன. அவர்களில் இரண்டு மாணவர்களுக்கு H1N1 பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. இந்த ஒரு பள்ளி மட்டுமில்லை.. பல இடங்களில் இதுபோல கொத்து கொத்தாக பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பெங்களூர் நிலைமை

    அதேநேரம் இதுபோல பாதிப்புகள் இருப்பதால் மட்டும் பெங்களூரில் H1N1 பாதிப்பு டெல்லியை விட அதிகமாகவோ அல்லது ஆபத்தானதாகவோ உள்ளது என்று சொல்லிவிட முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து பெங்களூரை சேர்ந்த தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐஸ்வர்யா, "பெங்களூர் வானிலை சுவாச வைரஸ் தொற்றுகள் மற்றும் காய்ச்சல் பரவுவதற்கு சாதகமாக இருக்கிறது.

    பெங்களூரில் ஜூன் மாதம் தொடங்கும் பாதிப்பு ஜனவரி, பிப்ரவரி வரையிலும் நீடிக்கக்கூடும். இதனால் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்காக பெங்களூர் H1N1 பாதிப்பு டெல்லியை விட தீவிரமானது என்று அர்த்தமில்லை. வானிலை, மக்கள் நடமாட்டம், கூட்ட நெரிசல் என இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதை பொறுத்தே வைரஸ் பாதிப்புகள் இருக்கும்" என்றார்.

    Advertisement

    அறிகுறிகள்

    பெங்களூரில் தொடர்ச்சியான வறட்டு இருமல், தொண்டை வலி, தசைவலி, காய்ச்சல், முதுகுவலி மற்றும் உடல் சோர்வு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. சில நோயாளிகளுக்கு இந்த முறை குமட்டலும் அதிகமாக காணப்படுவதாக டாக்டர் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், சில நாட்களுக்குள் அது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் பரவி விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த H1N1 சுவாச துகள்கள் மூலம் பரவுவதால் உடன் இருப்போருக்கு அது வேகமாக பரவுகிறது.

    இந்த H1N1 பாதிப்பு பெரும்பாலான மக்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இதுதவிர இதய, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல், ஆக்சிஜன் தேவை அதிகரித்தல், நெஞ்சுவலி மோசமடைந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    Advertisement

    H1N1 சிகிச்சைக்கு oseltamivir போன்ற ஆன்டிவைரல் மருந்துகள் உள்ளன. பாதிப்பு தீவிரமடையும் முன்பு, தொடக்கத்திலேயே இதை எடுத்து கொள்ளும்போது இந்த ஆன்டிவைரல் மருந்துகள் நல்ல பலனை தரும். அதேநேரம் இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    பெங்களூரு Vs டெல்லி

    பெங்களூரில் குளிர்ச்சியான கிளைமேட் காரணமாக காய்ச்சல் அதிக காலம் பரவுகிறது. பெங்களூரில் இப்போது H1N1 பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கூட அதற்காக நிலைமை டெல்லியை விட ஆபத்தானது என சொல்லிவிட முடியாது. அதேநேரம் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பது மோசமான பாதிப்புகளை தடுக்கும்.

    English Summary

    H1N1 cases are rising in Bangalore amid a surge in seasonal flu infections(பெங்களூரில் அதிகரிக்கும் பன்றி காய்ச்சல்): Bangalore H1N1 Cases latest news in tamil.