ஜிஎஸ்டி வரி: 4 அடுக்கிலிருந்து 2 அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு திட்டம்- அதிகாரி சூசகம்


டெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதம் விரைவில் 2 அடுக்கு விகிதங்களாகக் குறைக்கப்படும் என்று மத்திய வரிகளுக்கான முதன்மை ஆணையரான ஏ.கே.ஜோதிஷி கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே சந்தை என்ற நோக்குடன் புதிய சரக்கு மற்றும் சேவை வரி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஜிஎஸ்டி குறித்த விளம்பரங்களும், விழிப்புணர்வு பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டியை விளம்பரப்படுத்த மத்திய அரசு ரூ.132.38 கோடி செலவு செய்துள்ளது என்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

ஜிஎஸ்டி ஆணைய கூட்டம் கூடி அவ்வப்போது வரி விகிதங்களை மாற்றியமைத்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விகிதத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, ஒரே விகித சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்படும் என்று கூறினார். தற்போது ஆளும் பாஜக அரசு விதித்திருக்கும் கப்பார் சிங் வரியை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜிஎஸ்டியின் கீழ் வரி அடுக்குகள் இரண்டு விகிதங்களாகக் குறைக்கப்படும் என்று மத்திய வரிகளுக்கான முதன்மை ஆணையரான ஏ.கே.ஜோதிஷி தெரிவித்துள்ளார். பெங்களூரு வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட 'ஜிஎஸ்டி பணிமனை: நடைமுறைத் தேவைகள் மற்றும் சவால்கள்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்

தொழில் துறையினரின் கோரிக்கைகளை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டும் உள்ளன என்றார்.

தற்போதுள்ள வரிகளில் சுமார் 90 சதவிகிதம் அளவிலான வரிகள் 18 சதவிகித வரி வரம்புக்குள்தான் வருகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த முடிவை அரசு மேற்கொள்கிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதலே வரி செலுத்துவோரின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முயன்று வருகிறது. ஜிஎஸ்டி என்பது சீர்குலைவுச் சட்டமல்ல; அது மாற்றுச் சட்டமாகும். ஜிஎஸ்டி அறிமுகமானபோது பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் இருந்தன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் போகப்போக அதிலிருந்த சிக்கல்கள் குறைக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

The Centre is planning to slash the number of GST rate slabs from the present five to two in the near future, according to AK Jyotishi, Principal Chief Commissioner of Central Taxes, Bengaluru Zone.