மலை மலையாய் வெள்ளியை வாங்கி குவித்த சீனா.. ரூட்டு மாறுதே.. மக்களே உஷார்!

Subscribe to Oneindia Tamil

சீனாவின் வெள்ளி சந்தை இந்த ஆண்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 836 டன் வெள்ளியை சீனா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளின் மார்ச் மாதத்தின் சராசரி அளவான 306 டன்னை விட மிக அதிகம்.

இந்த திடீர் உயர்வு சர்வதேச சந்தையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் மலை மலையாய் வெள்ளியை சீனா வாங்கி வருவது மாறுப்பட்ட நடைமுறையை காட்டுகிறது. சீனாவில் முதலீடு மற்றும் தொழில்துறை தேவையை பூர்த்த செய்வதற்காக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிகிறது.

China Silver 2026 China Silver Imports 2026 Record Silver Imports China China Solar Silver Demand Silver Price Surge China Retail Investors Silver Buying China silver imports March 2026 record 836 tons silver China China silver market surge retail investors buying silver bars gold to silver shift China solar industry silver demand China solar panel silver consumption silver price gap China Hong Kong Bloomberg China silver data China silver imports vs global solar export tax rebate silver China overproduction solar sector silver demand cooling 2026 precious metals China trend sustainable silver demand China 2026 836 2026

மக்கள் தேவை

தங்கம் விலை அதிகமாக இருப்பதால், சீனாவில் பல சிறு முதலீட்டாளர்கள் குறிப்பாக மக்கள் மலிவு விலையில் கிடைக்கும் வெள்ளியை நோக்கி திரும்பியுள்ளனர். மக்கள் மத்தியில் சிறிய வெள்ளி பார்களை வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் சந்தை நிச்சயமின்மையில் இருந்து தங்களது சேமிப்பைப் பாதுகாக்க சீன மக்கள் வெள்ளியை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். இதனால் சீனாவில் உள்நாட்டு தேவை அதிகரித்து, வெள்ளி விலை உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு மார்ச் மாதத்தில் வர்த்தகமானது.

தொழிற்துறை தேவை

சீனாவின் பெரிய அளவிலான சோலார் பேனல் தொழிற்சாலைகள் வெள்ளி நுகர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. வெள்ளி சோலார் பேனல்களில் மிக முக்கிய உற்பத்தி பொருள். சோலார் பேனல் மூலம் மின்சாரத்தை திறம்பட உற்பத்தி வெள்ளி அவசியமானதாக உள்ளது, இதற்கு காரணம் வெள்ளிக்கு சிறந்த மின்கடத்தும் தன்மை உள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி சோலார் பேனலுக்கான ஏற்றுமதி வரி சலுகை முடிவதற்கு முன்பாக உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சீன தொழிற்சாலைகள் மார்ச் மாதத்தில் அதன் உற்பத்தியை அதிகரித்தது, இதன் காரணமாகவே மார்ச் மாதத்தில் அதிகளவில் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது. உலக வெள்ளி தேவையில் சுமார் 20 சதவீதம் சோலார் பேனல் தொழில்துறையிலிருந்து வருகிறது. இதில் சீனா முன்னிலையில் உள்ளது.

இந்த உயர்வு நீடிக்குமா?

சீனாவின் தற்போதைய வெள்ளி இறக்குமதி வேகம் நீண்ட காலம் தொடராது என நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு ஏற்றார் போல் ஈரான் போர் துவங்கியதும் வெள்ளி மற்றும் தங்க விலைகள் உச்சத்திலிருந்து சற்று குறைந்துள்ளன.

மேலும், சோலார் பேனல் தொழில் துறையில் அதிக உற்பத்தியை கட்டுப்படுத்த சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வரும் மாதங்களில் உற்பத்தியை மெதுவாக்கும். வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்தால், தொழிற்சாலைகள் மலிவான மாற்றுப் பொருட்களை நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளது. இப்படி மாறும் போது வெள்ளி விலை கூடுதலாக சரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+