நண்பருக்காக உயிரை கூட கொடுங்க.. ஆனா "இந்த" தப்பை மட்டும் பண்ணாதீங்க.. குடும்பத்திற்கே பிரச்சனையாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்மில் பலரும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு லோன் வாங்கும்போது கேரண்டி கையெழுத்து போட்டிருப்போம். ஆனால், இதுபோல கேரண்டி கையெழுத்து போடுவதால் மிகப் பெரிய சிக்கலில் மாட்டலாம் எனப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் கடனே வாங்க முடியாத சூழல் கூட ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

லோன் வாங்கும்போது பெரும்பாலான வங்கிகளில் கேரண்டி கையெழுத்து போட வேண்டும் என்பார்கள். சிலருக்குக் குடும்பத்திற்குள்ளேயே யாராவது கேரண்டி கையெழுத்து போட்டுவிடுவார்கள். இருப்பினும், பல நேரங்களில் நண்பர்கள் அல்லது நெருங்கிய சொந்தத்தை கேரண்டி கையெழுத்து போட வைப்பார்கள். நமது நாட்டில் பொதுவாகவே இந்த நடைமுறை இருக்கும்..

Don t Sign as Loan Guarantor for Friends How It Crushes Your CIBIL Score Economist Rajesh Warning

கேரண்டி கையெழுத்து

நண்பர்கள் தானே அல்லது சொந்தம் தானே என பலரும் கையெழுத்து போட்டுவிடுவார்கள். ஆனால், இந்த தவறை மட்டுமே செய்யவே வேண்டாம் என எச்சரிக்கிறார் பிரபலப் பொருளாதார வல்லுநரான ராஜேஷ். ஒருவேலை லோன் வாங்கியவர் கடனைக் கட்டவில்லை என்றால் கேரண்டி கையெழுத்து போட்டவர்களின் சிபில் அடி வாங்கும்.. வேறு எங்கும் லோன் கூட கிடைக்காது என அவர் எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கை

இது தொடர்பாக கே ராஜேஷ் மேலும், "எவ்வளவு நெருங்கிய சொந்தமாக/ நண்பனாக இருந்தாலும் கேரண்டி கையெழுத்து மட்டும் போடவே போடாதீங்க ப்ளீஸ்... லோன் வாங்குறவங்களுக்கும் ஒன்னு சொல்றேன். உங்களால முடிஞ்சா, உங்களோட சம்பளம் அதுக்கு eligibleஆ இருந்தா மட்டுமே லோன் வாங்குங்க. உங்களுடைய சுற்றம் மற்றும் நண்பர்களை இதுக்குள்ள இழுத்து போடாதீங்க" என பதிவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாகத் தனக்கு வந்த மெசேஜ் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் பைக் லோனுக்கு கேரண்டி கையெழுத்து போட்டாராம். அவரது நண்பர் முறையாக இஎம்ஐ கட்டாத நிலையில், இவரது சிபில் ஸ்கோர் அடி வாங்க ஆரம்பித்துள்ளது. இப்போது இவர் லோன் கேட்டு சென்றாலும் யாரும் லோன் கொடுப்பதில்லையாம். அவரது நண்பர் ஓராண்டாக பைக் இஎம்ஐ கட்டாத நிலையில், இவரது சிபில் ஸ்கோர் பாதிப்பதாக அந்த நபர் கூறியிருந்தார். இந்த சிக்கலை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

வேண்டவே வேண்டாம்

இது தொடர்பாக அவர் மேலும், "படத்திலுள்ள மெசேஜ் அனுப்பிய அன்பர், இப்போ அவருடைய நண்பர் வாங்கின கடன் முழுமையும் செலுத்தினால் மட்டுமே அவருடைய சிபில் நார்மல் ஆகும். நண்பருக்காக பீல் பண்ணி, உதவி செய்ய நினைத்தது மட்டும் தான் அவருடைய மிகப்பெரும் தவறு. அவருடைய நண்பரின் அலட்சியத்தால், இப்போ அந்த உதவி செய்த அன்பருக்கு லோன் கிடைக்கவே கிடைக்காது.

இவர் போய் நண்பருக்கு உதவினார். இவருக்கு உதவி, இவர் நண்பர் தயாராக இல்லை. இதுதான் ரியாலிட்டி. முஸ்தஃபா, முஸ்தஃபா ன்னு நண்பர்களுக்கு உயிர வேணும்னாலும் குடுங்க. ஆனா கேரண்டி கையெழுத்து மட்டும் போடவே போடாதீங்க" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்திற்கே பிரச்சனை

அதாவது லோன் வாங்கியவர் நிச்சயம் அதைத் திரும்பச் செலுத்துவார் என்று உறுதி அளிப்பதே கேரண்டி கையெழுத்தின் அர்த்தம். எனவே, லோன் வாங்கிய நபர் கட்டவில்லை என்றால் சட்டப்படி அதைத் திரும்பச் செலுத்தும் பொறுப்பு கேரண்டி கையெழுத்து போட்டவருக்கே இருக்கும். லோன் கட்டவில்லை என்றால் சிபில் ஸ்கோரும் குறையும். இதன் காரணமாகவே பிற்காலத்தில் சொந்தத் தேவை அல்லது குடும்பத்திற்கு எதாவது அவசரத் தேவை என்றாலும் கூட லோன் வாங்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+