சர்வதேச மார்கெட்டில் நடக்கும் மேஜிக்.. யூடர்ன் போடும் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு நாள் குறையும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து புதிய சாதனையைப் படைத்து வந்தது. ஆனால், இன்றைய தினம் தங்கம் விலை குறைந்துள்ளது. இதற்கிடையே சர்வதேச சந்தையிலும் கூட இன்றிரவு தங்கம் வலை குறைந்துள்ளது. இதனால் நாளை இந்தியச் சந்தையிலும் தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. டிரம்ப் அதிபரான பிறகு அவர் செய்த செயல்களே தங்கம் விலை உச்சத்திற்குப் போகக் காரணமாகும். குறிப்பாக அவர் இந்தியா மீது 50% வரி விதித்த பிறகு தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. நாளுக்கு நாள் புதிய உச்சம் எனத் தங்கம் போனது. நேற்று வரை இப்படித் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்தே வந்தது.

Gold Dips from Record 3 578 50 as Investors Eye US Jobs Data for Fed Rate Cut Clues

தங்கம் விலை திடீர் குறைவு

இந்தச் சூழலில் தான் இன்று திடீரெனத் தங்கம் விலை குறைந்தது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கொஞ்சம் லாபம் பார்க்கத் தங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை விற்றுள்ளனர். இதுவே தங்கம் விலை குறையக் காரணமாகும்.. அதேபோல அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களில் என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. அமெரிக்க வேலைவாய்ப்பு டேட்டா எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே பெடரல் வங்கி முடிவெடுக்கும். இதனால் வேலைவாய்ப்பு டேட்டா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கம் விலை இப்போது சரிய இதுவே காரணமாகும்.

ரேட் எவ்வளவு

அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3% குறைந்து $3,547.18 ஆக இருந்தது. அதே நேரத்தில், டிசம்பர் டெலிவரிக்கான கோல்ட் பியூச்சர்ஸ் 0.8% சரிந்து $3,605.90 ஆக இருந்தது. இதே நிலை நாளை எதிரொலித்தால் தங்கம் விலை இந்தியாவிலும் சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்டான்எஸ் வல்லுநர் ரோனா ஓ'கானல் கூறுகையில், "சந்தையில் தங்கம் அதிக அளவில் வாங்கப்பட்டிருந்தது. புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக தங்கம் கடந்த சில மாதங்களாக அதிகளவில் வாங்கப்பட்டது. இப்போது தங்கம் விலை ஒரு கரெக்ஷன் தேவைப்பட்டது. அதுவே இப்போது நடந்திருக்கிறது" என்றார்.

காரணம் என்ன!

அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 17ம் தேதி மத்திய வங்கி கூட்டம் நடைபெறுகிறது. அதில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதேநேரம் அதற்கு முன்பு நாளை வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இருக்கும் வேலைவாய்ப்பு சூழல் குறித்து டேட்டா வெளியாகவுள்ளது. அதைப் பொருத்தும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

ரோனா மேலும் கூறுகையில், "வேலையின்மை எதிர்பாராத அளவுக்கு அதிகமாக இருந்தால் தங்கம் விலையிலும் அது எதிரொலிக்கும். வேலையின்மை குறைவாக இருந்தால் தங்கம் விலை குறையும்.. வேலையின்மை அதிகமாக இருந்தால் தங்கம் விலையும் அதிகரிக்கும்" என்றார்.

மற்ற உலோகங்கள்

தங்கம் மட்டுமின்றி இதர உலோகங்களும் கூட ஓரளவுக்குக் குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் வெள்ளி 0.6% குறைந்து $40.95ஆக இருந்தது. பிளாட்டினம் 1.9% சரிந்து $1,394.40 ஆகவும், பல்லேடியம் 1% குறைந்து $1,136.19 ஆகவும் இருந்தன. இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஓரளவுக்குக் குறைந்துள்ள நிலையில், இந்தியாவிலும் நாளை அது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+