“CM விஜய் சந்திக்கப்போகும் பிரச்சனைகள்”... ஆட்சி கவிழுமா?.. ஜோதிடர் ஷெல்வி பரபரப்பு கணிப்பு
CM Vijay: தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிய அரசின் செயல்பாடுகள், நிர்வாக முடிவுகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலை குறித்து பல்வேறு விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்வர் விஜயின் அரசியல் பயணம் மற்றும் அடுத்தடுத்த சவால்கள் குறித்து ஜோதிடர் ஷெல்வி பரபரப்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளதாவது: ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்து ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை. இரண்டரை ஆண்டுகாலத்தில் ஒரு கட்சியை விஜய் ஆரம்பித்து 60 ஆண்டுகால கட்சிகளை தோற்கடித்துள்ளார். பஞ்சாங்க அமைப்பில் பராபவ வருடம் என்பது 60 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும். வலிமை மிக்க வருடமாக பராபவ வருடம் கருதப்படுகிறது. திராவிட கட்சிகளை மொத்தமாக ஒழித்து விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

விஜயின் பதவியேற்பு ரகசியம்
அரசியலே தெரியாதவர்கள் கூட தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளனர். 100க்கு 100 சதவீத மக்கள் வேட்பாளர்கள் பெயர் கூட தெரியாமல் முழுக்க முழுக்க விஜய்க்காக ஓட்டு போட்டுள்ளனர். பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 14 முதல் மே 14 ஆம் தேதி வரையிலான சித்திரை மாதத்தில் கடக ராசி லக்னத்தில் 10 ஆம் இடத்தில் சூரியன் உச்சமாகிறார். இந்த காலகட்டத்தில் விஜய் பதவியேற்பது தான் நல்லது என்பதால் அவர்கள் அவசர அவசரமாக பதவியேற்றனர்.
குரு புத்தியால் விஜய் பதவியேற்பதில் தடைகள் ஏற்பட்டன. ஏப்ரல் 23 ஆம் தேதி வரை ராகு புத்தியும், அதன் பிறகு குரு புத்தியும் இருந்ததால் சிறு சிறு சிக்கல்களைக் கொடுக்கும். 2028 ஆம் ஆண்டு இறுதி வரை இந்த அமைப்பு இருக்கும். அதற்குப் பிறகு சனி புத்தி நடக்கும். மே 14 ஆம் தேதிக்குள் அவர் முதல்வராகப் பதவியேற்றுள்ளது ஜோதிடப்படி மிகவும் நன்மையாகும்.
அஷ்டமி திதியில் பதவியேற்பு
அஷ்டமி திதி என்பதை நிறைய பேர் தவறாகப் பார்க்கின்றனர். ஆனால், அஷ்டமி திதி என்பது பெரிய வெற்றிகளையும், அதிர்ஷ்டங்களையும் கொடுக்கக் கூடியதாகும். வாக்கியத்தின்படி அவர் பதவியேற்றது சதய நட்திரத்தன்று. சதயம் என்பது ராகு நட்சத்திரம். ராகு நட்சத்திரம் முடிந்து குரு நட்சத்திரமான பூராடம் வந்தால் நிறைய அபகடம் ஏற்படுமென்பதால் அவர்கள் விரைவில் பதவியேற்றுள்ளனர்.
9 என்பது செவ்வாய். வளர்ச்சிக்குண்டான விஷயம் என்பதால் முதல்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஜெயலலிதா பாணியில் விஜய் இதனை செய்துள்ளார். சிவப்பு என்பது ராகு. அதனால், விஜய் அவரது கையில் சிவப்பு கயிறை கட்டியிருப்பார். கருப்பு கயிறு திருஷ்டியை போக்கும். சிவப்பு கயிறு என்பது பாதுகாப்பை கொடுக்கும். திருஷ்டியை போக்கும் வகையில், வளர்ச்சி ஏற்படும் வகையில் விஜய் சிவப்பு கயிறை கட்டியிருக்கலாம்.
விஜய்க்கு சுக்கிர திசை
வரக்கூடிய காலத்தில் விஜய், உதயநிதி, அண்ணாமலை என்கிற 3 முகங்களை வைத்து தான் தமிழக அரசியல் பேசப்படும். நான்கு முனை, ஐந்து முனை போட்டி என எவ்வளவு வந்தாலும் இந்த 3 பேருக்குள் தான் மிகப்பெரிய அரசியல் நகரும். விஜய்க்கு சுக்கிரதிசை நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிர திசையில் குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி என வந்து சுக்கிர திசை முடியும்.
தவெகவினர் ஆட்சியைப் பிடித்துவிட்டோம், நாம் நிரந்தரமாக இருப்போம், நாம் தான் மந்திரி என்று இருக்க முடியாது. தவறு நடந்தால் ஒரு நொடியில் விஜய் முடிவெடுப்பார். நிர்வாகத்தில் விஜய் நினைத்தது நடக்கவில்லை எனில் நிறைய மாற்றம் நடக்கும். எந்தப் பிரச்சனை நடந்தாலும் விஜய் அந்த பகுதியின் போலீஸாருக்கு கூட நேரடியாக விஜய் பேசக்கூடிய நிலை எல்லாம் வரும்.
விஜயின் ஆட்சி கவிழுமா
புதிய ஆட்சியை நடத்துவார். மக்களிடம் இருந்து கெட்ட பெயர் வருவதற்கு விடமாட்டார். ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான செயல்கள் போன்றவை நடக்காது. விஜயுடைய அரசியல் மாறுபட்ட அரசியலாக இருக்கும். எல்லாவற்றையும் சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பார், இல்லையெனில் அரசியல் எனக்கு சரியாக வரவில்லை என்று கூறி அசால்டாக தூக்கிப் போடக்கூடியவர். அந்த அமைப்பு உள்ளது. மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பார்.
2027 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை முதல்வர் விஜய்க்கு சிறு சிறு தடைகள் காணப்படும். அந்த தடங்கல்களை தாண்டிவிட்டால் போதும். ஆரோக்கியத்தை விஜய் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு அழுத்தம், கோபப்படாமல் எல்லாவற்றையும் கையாளுவது நல்லது. உணவு விஷயத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை பார்த்துக் கொண்டாலே வேறு எந்தவிதமான பெரிய பிரச்சனையும் அவருக்கு வராது. விஜயின் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறினார்.
-
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications