டிரம்ப்பின் அந்த ஒரு வார்த்தை! சர்வதேச சந்தையில் சட்டென சரிந்த தங்கம் விலை! அப்போ நாளை செம சம்பவம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த பல நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இப்போது சட்டெனஸ் பீட் பிரேக்கரை போட்டுள்ளது. சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினமும் தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது. இதனால் இந்தியச் சந்தைகளிலும் நாளை தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம் விலை அதன் பிறகு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம் குறைந்து வரும் சூழலில், தங்கத்தின் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Gold Prices Take minor drop Demand Wanes as US-China Tensions Ease But Trade Confusion Looms

சரியும் தங்கம் விலை

இன்று திங்கள்கிழமை சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் 0.6% குறைந்து ஒரு அவுன்ஸ் $3,297.10ஆக வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தையில் எப்போதும் 24 கேரட் தங்கம் விலையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் 24 கேரட் தங்கம் ரூ.9,029.31ஆக குறைந்துள்ளது.

அதேநேரம் கோட்ல் ப்யூச்சர்ஸ் 0.3% உயர்ந்து $3,307.80 ஆக இருந்தது. அதாவது இந்திய மதிப்பில் ₹9,057.41ஆக இருக்கிறது. கோல்ட் ப்யூச்சர்ஸ் என்றால் என்ன என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் எதிர்காலத்தில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்து இந்த கோல்ட் ப்யூச்சர்ஸ் நிர்ணயம் செய்யப்படும்.

காரணம் என்ன?

ஸ்பாட் தங்கம் விலை குறைந்துள்ளது குறித்து மார்கெட் பல்ஸ் ஆய்வாளர் ஜைன் வாவ்டா கூறுகையில், "சர்வதேச அளவில் வர்த்தகப் போரில் இன்னும் முழுமையான தெளிவு கிடைக்கவில்லை. அதேநேரம் அமெரிக்கா- சீன வர்த்தகப் போர் குறையும் என்றே தெரிகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை குறைந்து வருகிறது" என்றார். இதன் காரணமாகவே பங்குச்சந்தையும் கூட சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.

என்ன நடக்கும்?

பொதுவாகத் தங்கம் விலையும் பங்குச்சந்தையும் நேர் எதிராக இருக்கும். அதாவது சர்வதேச அளவில் பதற்றமான சூழல் ஏற்படும்போது பங்குச்சந்தை அடிவாங்கும்.. தங்கம் விலை உயரும். ஏனென்றால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைப் பாதுகாக்கத் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அதேநேரம் சர்வதேச பதற்றம் சீராகும் போது தங்கம் விலை குறையும். பங்குச்சந்தை உயரும். அதாவது முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளைக் குறைத்து, ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்வார்கள். இப்போதும் அதுவே நடந்து வருகிறது.

டிரம்ப் சொன்ன வார்த்தை!

அதேநேரம் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம் முழுமையாகச் சீராகிவிட்டது எனச் சொல்ல முடியாது. ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேசியுள்ளதாகவும் கூறுகிறார். அதேநேரம் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்று இதைச் சீனா மறுத்துள்ளது. இதனால் ஒரு தெளிவில்லாத சூழலே நிலவி வருகிறது. இதனால் தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை.

மேலும், இந்த வாரம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, தனிநபர் செலவு, ஊதியம் எனப் பல்வேறு முக்கிய டேட்டாகள் வெளியாகவுள்ளது. அதைப் பொறுத்தும் தங்கம் விலையில் மாற்றம் இருக்கலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது தங்கம் விலை குறைகிறது. ஆனால், சர்வதேச வர்த்தகச் சூழல் முழுமையாகத் தெளிவாகும் வரை தங்கம் விலை உயரவும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+