பங்காளியை கூட்டாளியாக்கும் சுந்தர் பிச்சை.. தரமான சம்பவம் செய்யும் கூகுள்!

Subscribe to Oneindia Tamil

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மிகப்பெரிய முதலீட்டை செய்யத் தயாராகி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் அன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடு ஏஐ துறையில் நடைபெறும் கடுமையான போட்டியை தெளிவாகக் காட்டுகிறது. கூகுள் ஜெமினி என்ற ஏஐ தளத்தை வைத்திருக்கும் நிலையில் போட்டி நிறுவனமான அன்த்ரோபிக் மீது முதலீடு செய்கிறது. எப்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்ததோ அதேபோல் கூகுள் Anthropic நிறுவனத்திற்கு ஏற்கனவே பல்வேறு சேவைகளை அளிக்கும் முக்கிய சப்ளையராக இருக்கும் நிலையில் தற்போது முதலீட்டாளராகவும் உயர உள்ளது.

Google AI Anthropic Sundar Pichai Google Anthropic Investment Sundar Pichai AI Strategy Google 10 Billion AI Deal Anthropic Funding 2026 AI Race Google Amazon 10 Google invests 10 billion in Anthropic Sundar Pichai Anthropic deal Google Anthropic AI partnership Anthropic valuation 350 billion Google additional 30 billion Anthropic Claude Code AI tool Google cloud business growth Amazon Anthropic investment AI race between Google and Amazon Google computing power to Anthropic AI infrastructure investment 2026 Google AI chips Anthropic big tech AI battle future of artificial intelligence Google Anthropic five year computing deal 10 350 30

இந்த 10 பில்லியன் டாலர் முதலீட்டை அன்த்ரோபிக் நிறுவனத்தை 350 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. மேலும் அன்த்ரோபிக் சில இலக்குகளை அடைந்தால், கூகுள் மேலும் 30 பில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்துடன் கூட, கூகுள் அன்த்ரோபிக் நிறுவனத்துக்கு தேவையான பெரிய அளவிலான கம்ப்யூட்டிங் பவர் வழங்கும். ஏஐ மாடல்களை பயிற்றுவிக்கவும் இயக்கவும் இந்த கம்பியூட்டிங் பவர் மிக முக்கியம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீடிக்கும்.

அன்த்ரோபிக் நிறுவனம் தற்போது ஏஐ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக 'கிளாட் கோட்' (Claude Code) என்ற அதன் சிறப்பு கருவி ஒட்டுமொத்த மென்பொருள் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது. சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு வேகமாக கோட் எழுத உதவுகிறது. இந்த வெற்றியால் அமேசான் ஏற்கெனவே இந்நிறுவனத்தில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. வரும் காலத்தில் 20 பில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு செய்யவும் தயாராக உள்ளது அமேசான்.

கூகுள் நிறுவனமும் அன்த்ரோபிக் நிறுவனத்திற்கு முதலீட்டை தாண்டி ஒருபுறம் உதவி செய்து வருகிறது. அன்த்ரோபிக் கூகுளின் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ சிப்களை பயன்படுத்துகிறது. இது கூகுளின் கிளவுட் வியாபாரத்தை வளர்க்க உதவுகிறது. ஆனால் மறுபுறம் இரு நிறுவனங்களும் ஏஐ துறையில் கடுமையான போட்டியாளர்களாகவும் உள்ளன.

இந்த ஒப்பந்தம் கூகுளுக்கு தனது விளம்பர வருவாய் குறையும் நிலையில் கிளவுட் சேவை மூலம் புதிய வருவாய் ஆதாரத்தை உருவாக்க உதவும். இதேபோல் அன்த்ரோபிக் மாடல்களை இயக்க அதிகளவில் கூகுள் டென்சார் சிப்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் என்விடியாவுக்கு போட்டியாக கூகுள் டென்சார் சிப் வர்த்தக சந்தையில் முக்கியதுவம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கூகுளின் இந்த முதலீடு ஏஐ துறையில் நடைபெறும் பெரிய போட்டியை எடுத்துக்காட்டுகிறது. இதேபோல் கூகுள் மறைமுகமாக ஏஐ துறையில் அன்த்ரோபிக் மூலம் ஆதிக்கம் செலுத்தவும் தயாராகி வருகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் பணத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொட்டி வருகின்றன. எதிர்காலத்தில் ஏஐ தான் தொழில்நுட்ப உலகின் மையமாக இருக்கும் என்பதை இந்த முதலீடுகள் உணர்த்துகின்றன.

டிசிஎஸ், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்களும் ஏஐ-இல் பெரும் தொகையை செலவழித்து வருகின்றன. ஏஐ கருவிகள் மூலம் புதிய வேலைகள் உருவாகலாம், இதேவேளையில் காலம் காலமாக செய்து வரும் பழைய வேலைகள் மாறலாம் அல்லது குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அச்சத்தையும் மறக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+