பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் மூத்த அதிகாரிகள்.. பன்னாட்டு வங்கிகளுக்கு தண்ணி காட்டிய ராகவன்!
எங்கு திரும்பினாலும் பணிநீக்கம் செய்திகள் கேட்கும் இந்த காலகட்டத்தில், தன் தலைவிதியைத் தானே மாற்றியமைத்த ஒரு இந்தியரின் கதை தான் தற்போது முதலீட்டு சந்தையின் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது.
ஜேபி மார்கன் சேஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக மூத்த பொறுப்பில் இருந்த பிரிட்டிஷ் - இந்திய முதலீட்டு வங்கியாளரான விஸ் ராகவன் பணியில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவித்த 2 நாளில் சிட்டி குரூப் நிறுவனத்தின் முதலீட்டு வங்கித் துறையின் உயர் தலைமைப் பொறுப்பை பெற்றார்.
வெறும் 48 மணி நேரத்துக்குள் விஸ் ராகவன் செய்த இந்த செயல் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோல் ஜே மோர்கனில் சேஸ் நிறுவனத்தில் பாலியல் புகார் விவகாரத்தில் சக்கியுள்ள மூத்த அதிகாரி லோர்னா ஹஜ்தினி சந்தித்த இதே நிலையை விஸ் ராகவனும் சந்தித்தார்.

யார் இந்த விஸ் ராகவன்?
விஸ் ராகவன் உலகளாவிய முதலீட்டு வங்கி (Investment Banking) துறையில் பெரும் அனுபவம் கொண்ட பிரிட்டிஷ் - இந்திய வம்சாவளியை சேர்ந்த வங்கி நிபுணர். இவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை முன்னணி நிதி நிறுவனங்களான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லியில் பணியாற்றிய முக்கிய நபர்.
குறிப்பாக ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா (EMEA) சந்தைகளில் முதலீட்டு வங்கி செயல்பாடுகளை முன்னெடுத்ததில் இவருக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது.
ஜேபி மோர்கனில் திடீர் திருப்பம்
2024 பிப்ரவரி மாதத்தில் ஜேபி மோர்கனில் நடந்த உயர்மட்ட நிர்வாக மாற்றங்கள் மத்தியில், விஸ் ராகவனின் எதிர்காலம் இந்நிறுவனத்தின் இல்லை என்பது தெளிவானது. பல ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்திருந்த இவருக்கு இது எதிர்பாராத மாற்றமாக அமைந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 2024ல் வெள்ளிக்கிழமை ஜேபி மோர்கன் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் Vis Raghavan-ஐ பணியில் இருந்து வெளியேற உத்தரவிட்டனர்.
விஸ் ராகவன் செய்த தவறு
விஸ் ராகவன் ஜேபி மோர்கன் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில், அவர் சில ஊழியர்களை "பயனற்றவர்கள்", "அறிவில்லாதவர்கள்" எனக் குறைத்து பேசியதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. மேலும், அவரது நடத்தை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக ஒருகட்டத்தில் அவரது ஊதியம் கூட குறைக்கப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு கீழ் பணியாற்றிய ஒரு பெண்ணை முன்பு பார்க்க அழகாக இருந்தார் ஆனால் இப்போது குண்டாகியிருக்கிறார் என தவறான கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை சிட்டிகுரூப் நிறுவனம் மறுத்துள்ளது.
மற்றொரு பாலியல் புகார்
ஜேபி மார்கன் சேஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி லோர்னா ஹஜ்தினி மீது இந்திய இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம், இனவெறி மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த புகார்களை லோர்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் குற்றம்சாட்டப்பட்ட இடத்துக்கு தன் வாழ்நாளில் சென்றதே இல்லை என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் எழுப்பப்பட்டதாகவும் அவர் தரப்பு வாதிட்டுள்ளது.
ஜேபி மார்கன் வங்கி நடத்திய உள் விசாரணையில் லோர்னாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
48 மணி நேரத்தில் நடந்த அதிரடி ஒப்பந்தம்
ஜேபி மோர்கனில் ராகவன் வெளியேற்றிய நிலையில் இந்த சவாலான சூழ்நிலையை விஸ் ராகவன் தனது திறமையால் வாய்ப்பாக மாற்றினார். வெளியேறிய அடுத்த நொடியே வேலை தேட துவங்கி, 2 நாளில் (சனி, ஞாயிறு) உலகின் மற்றொரு பெரிய வங்கியில் உயர் பதவியை பிடித்தார்.
விஸ் ராகவன் செய்த சின்ன விஷயம் சிட்டிகுரூப் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்துடன் நேரடி பேச்சுவார்த்தையைத் செய்தது.
சாதாரணமாக ஒரு வங்கியில் பணியில் சேர வேண்டும் என்றாலே பல வாரங்கள் பேச்சுவார்த்தை நடைபெறும், சிட்டிகுரூப் போன்ற பெரிய வாங்கிகளில் மூத்த பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்றால் மாத கணக்கில் கூட ஆகும்.
விஸ் ராகவனின் நல்ல நேரம் சிட்டி குரூப்-ன் அப்போது முதலீட்டு வங்கியியல் பிரிவை நிர்வாகம் செய்ய மூத்த அதிகாரியை தேடி வந்தது. இதை பயன்படுத்த முடிவு செய்த விஸ் ராகவன் நேரடியாக உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசிய காரணத்தால் நீண்ட தேர்வு நடைமுறைகளை தவிர்த்தார்.
இந்த வேகமான பேச்சுவார்த்தைகள் வெறும் இரண்டு நாட்களில் முடிவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் முடிவாகி, திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 52 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியத்துடன் விஸ் ராகவன் சிட்டி குரூப் வேலையை பெற்றார்.
இன்று வரையில் வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் இந்த சம்பவம் அரிதானதாகவே காணப்படுகிறது. இது சாதாரண வேலை மாற்றம் அல்ல, இரண்டு பெரிய வங்கி நிறுவனங்களின் தலைமையை ஒரே நேரத்தில் மாற்றியமைத்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜேபி மோர்கன் விஸ் ராகவனை வெள்ளிக்கிழமை வெளியேற்றியதால், திங்கட்கிழமை தான் அவர் வெளியேற்றிய விஷயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்தது. இந்த 2 நாளில் விஸ் ராகவன் சிட்டிகுரூப் வேலையை பெற்றார்.
இதன் மூலம் ஜேபி மோர்கன் விஸ் ராகவன் வெளியேற்ற செய்தியும், சிட்டிகுரூப் விஸ் ராகவன் சேர்ந்த விஷயத்தையும் ஒரே நேரத்தில் அறிவித்தது. இது வால் ஸ்ட்ரீட்-ல் இன்றும் பேசப்படும் விஷயமாக உள்ளது, குறிப்பாக ஏஐ மூலம் பணிநீக்கம் செய்திகள் அதிகமாக வந்துக்கொண்டு இருக்கும் வேளையில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications