அதிமுகவில் பிளவு – எடப்பாடி பழனிசாமியை விலக்க முடிவா? 34 எம்எல்ஏக்கள் தனி ஆலோசனை.. என்ன நடக்கிறது?
அதிமுகவுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 34 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த திடீர் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து விலக்குவதா அல்லது கட்சியை இரண்டாகப் பிரிப்பதா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், இந்த 34 பேரும் இந்த தனி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்
இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 4-5 நாட்களாக 20க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் புதுவை ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், அனைவரும் சென்னை வந்தனர்.
இக்கூட்டம் முடிந்த பின்பு எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையை வெளியிட்டார்.
சென்னையில் நடைபெற்ற தனி ஆலோசனை கூட்டம்
இந்த அறிக்கைக்கு பின்பு, சிவி சண்முகம் தலைமையில் சென்னையில் தனி ஆலோசனை கூட்டத்தில் மரகதம் குமாரவேல், நத்தம் விஸ்வநாதன், சத்தியபாமா, ரவி மனோகர், கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் அதிமுகவின் காலை ஆலோசனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவரான லீமா ரோஸ் இந்த தனி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவர் தவெகவின் முக்கிய தலைவரான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து திரும்பிய எம்எல்ஏக்கள்
அதிமுகவின் 47 எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார். இன்று அவர்கள் அனைவரும் சென்னை திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் 34 எம்எல்ஏக்கள் தனியாகக் கூடியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிமுகவின் மொத்த பலத்தில் இரு மூன்றில் 2 பங்கிற்கு மேல். தற்போது இந்த 34 எம்எல்ஏ-க்களும் தனியாக பிரிந்தால், கட்சி மாறும் சட்டத்தால் (ஆண்டி டிஃபெக்ஷன் சட்டம்) அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கட்சி இரண்டாக உடைந்தால் என்ன நடக்கும்?
அதிமுக இரண்டாகப் பிரிந்தால், எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படவும், அதிமுக பெயரை உரிமை கோராமலும் செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்த வழியில் சென்றால் அனைத்து தரப்பினருக்கும் பெரிய பிரச்சனை ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இதுவே சின்னம், கட்சி பெயருக்கு உரிமை கோரினால் பெரும் சட்ட போராட்டமாக மாறும். அல்லது இந்த தனி பேச்சுவார்த்தை அப்படியே மறைந்தும் போகலாம்.
புதிய திருப்பம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் பிளவு புதியது அல்ல, ஏற்கனவே OPS இக்கட்சியை விட்டு வெளியேறியது முக்கியமான பிளவாக பார்க்கப்பட்டது. தற்போது 3ல் 2 பகுதி எம்எல்ஏ-க்கள் தனியாக செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசியல் சூழலை முழுமையாக மாற்றியுள்ளது. 34 எம்எல்ஏக்களின் நகர்வு கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications