மன்னிப்பு கோரினார் தவெக அமைச்சர் கீர்த்தனா.. அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என உருக்கம்!
சென்னை: "மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக் குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள்தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது" என்று தவெக அமைச்சர் கீர்த்தனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், கடந்த 10ஆம் தேதி பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனா உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், தவெக அமைச்சருமான கீர்த்தனா, மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பயன்படுத்திய வார்த்தை பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது.
அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications