12வது முறை.. ஒரே சீசனில் 400 ரன்கள்.. கன்சிஸ்டன்சிக்கு மறுவார்த்தையே விராட் கோலி தான்!
பெங்களூர்: ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 21 ரன்களை கடந்த போது, 12வது முறையாக ஒரே சீசனில் 400 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. இதன்பின் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி - பெத்தல் கூட்டணி களமிறங்கியது. கடந்த 2 போட்டிகளிலும் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதனால் இம்முறை விராட் கோலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்ப செளரப் துபே வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி முதல் ரன்னை சேர்த்தார். அப்போதே முதல் ரன்னை குவித்த மகிழ்ச்சியை விராட் கோலி வெளிப்படுத்தினார். வைபவ் அரோரா வீசிய 2வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விராட் கோலி விளாசி தள்ளினார்.
இதனால் விராட் கோலி மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட தயாராகிவிட்டதாக பார்க்கப்பட்டது. பவர் பிளேவில் தேவைக்கேற்ப அதிரடியாக ஆடிய விராட் கோலி, இன்னிங்ஸை சிறப்பாக கட்டமைத்தார். 32 பந்துகளில் அரைசதம் விளாசிய விராட் கோலி, இந்த சீசனில் 400 ரன்களை கடந்துவிட்டார். இதன் மூலமாக விராட் கோலி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
அதாவது ஒரே சீசனில் 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் விராட் கோலி முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதுவரை நடந்துள்ள 19 ஐபிஎல் சீசன்களில் 12 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்து விராட் கோலி சாதித்துள்ளார். இவருக்கு பின் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா தலா 9 சீசன்களிலும், ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா தலா 9 சீசன்களிலும் 400 ரன்களுக்கு மேல் குவித்திருக்கின்றனர்.
அதேபோல் கேஎல் ராகுல் 8 முறையும், சுப்மன் கில் 7 முறையும், டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலா 6 சீசன்களிலும் 400 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கின்றனர். இதன் மூலமாக மீண்டும் ஒருமுறை கன்சிஸ்டன்சி என்ற வார்த்தைக்கு மறுபெயர் விராட் கோலி என்று நிரூபித்து காட்டி இருக்கிறார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications