சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் விஜயின் பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக கலைஞர் குடும்பம் குறித்து பேசியதை பாஜகவை விமர்சித்து இருக்கிறது. கடந்த காலங்களில் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை விமர்சித்து பேசிய விஜய், தற்போது சட்டமன்றத்தில் அதே குடும்பத்தை விமர்சிக்கிறாரா? என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி 21 நாட்கள் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை முதல்வர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய், திங்கட்கிழமை பதில் அளிப்பேன் என கூறிவிட்டு சட்டசபை அரங்கில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று சட்டசபை கூடிய போது மிகக் கடுமையாக திமுகாவை விமர்சித்து பேசினார் முதல்வர் விஜய். மேலும் சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சைகை ஒன்றின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்ததை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். விஜயின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் ஃபயர் விட்டு வந்தாலும், திமுக, பாஜக, கம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சிகளுமே விஜயின் சைகையையும் பேச்சையும் கண்டித்து வருகின்றன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த காலங்களில் முதல்வர் விஜய் கருணாநிதியின் குடும்பத்தை புகழ்ந்து பேசிவிட்டு தற்போது விமர்சிப்பதை பாஜக வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய்," கலைஞர் கருணாநிதி குடும்பத்தில் உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, கனிமொழி, தமிழரசு என பெயர்களை கேட்கும் போதே படங்களுக்கு டைட்டில் வைக்க வேண்டும் என தோன்றும். அந்த அளவுக்கு பவர் ஃபுல்லான பெயர்கள். இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையாக பேர் சொல்லக்கூடிய குடும்பம் என்றால் அது ஜவஹர்லால் நேருவின் குடும்பம். தமிழ்நாட்டில் பெயர் சொல்ல கூடிய குடும்பம் என்றால் அது கலைஞர் ஐயாவுடைய குடும்பம்" என பேசி இருந்தார். இந்த நிலையில் பழைய வீடியோவையும், நேற்று சட்டசபையில் சிஎம் விஜய் பேசிய வீடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ள பாஜக, "என்னது, அன்னைக்கு திமுகவுக்கு புகழாரம் பாடுனதும், இன்னைக்கு திமுகவ கழுவி ஊத்துறதும் ஒரே நபரா?" என கேள்வி எழுப்புள்ளது. அந்த வீடியோவை 35000 மேற்பட்டோர் பார்வையிட்டதோடு அதனை பகிர்ந்தும் வருகின்றனர்.