கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்பிலும் அரசியல் செய்யும் திருமா..எல் முருகன் தாக்கு
சென்னை: நடிகர் விவேக் இறப்பில் திருமாவளவன் அரசியல் செய்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில்லாமல் கொடைக்கானலில் தங்கி இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எல் முருகன் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொரோனா வழிகாட்டுதல்கள்
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது என்று குறிப்பிட்ட அவர், கொரோனா முதலாம் அலையைக் கட்டுப்படுத்தியது போல், இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து அரசின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருமா அரசியல் செய்கிறார்
நடிகர் விவேக் மரணம் துக்கத்தை ஏற்படுத்துவதாகவும், சமூக சிந்தனையாளரான நடிகர் விவேக்கின் இழப்பு தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும் எனவும் அவர் கூறினார். ஆனால் நடிகர் விவேக்கின் மரணத்தை திருமாவளவன் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய எல் முருகன், அவரே(திருமாவளவன்) தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றும் எனவே, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பொய் பிரசாரம் வேண்டாம்
விவேக்கின் மரணம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த முருகன், நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் நடிகர் விவேக்கைப் போலவே நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்றும் தெரிவித்தார். எனவே பொய் பிரச்சாரங்கள் செய்யவேண்டாம் எனவும் கூறினார்.

ஸ்டாலின் மீது விமர்சனம்
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் கொடைக்கானலில் தங்கி இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை, தொழில் பேட்டை மற்றும் மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications