சந்திரபாபு நாயுடு பின்னாடி பாஜக? விஜய்யை சுற்றி தெலுங்கர்கள்.. வேல்முருகன் ஏன் இன்னும் இதை பேசல

  • சென்னை: திமுகவை அவசரப்பட்டு கூட்டணியிலிருந்து காங்கிரசார் விலக்கிவிட்டார்கள். காங்கிரஸால் திமுக ஆதரவு இல்லாமல் செல்ல முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. மாணிக்கம் தாக்கூர் போன்றவர்கள் திமுகவை விமர்சிக்கிறார்கள். ஒரு எம்பி இடத்தைப் பாதுகாத்துக்கொண்டு புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைக்கிறார்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

    Advertisement

    தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "சந்திரபாபு நாயுடுவை விஜய் சந்திக்கிறார். ஆந்திராவுக்கு சென்று வருவதால் என்ன பலன் கிடைக்கிறது? அங்கே இருப்பவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

    Advertisement

    சந்திரபாபு நாயுடு

    விஜய்யை சுற்றி விஷ்ணு ரெட்டி, அனில் ரெட்டி, கொசரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி எனப் பலரும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் தெலுங்கு பேசுபவர்கள். வேறு மாநிலங்களில் இப்படியொரு அமைப்பை பார்க்க முடியுமா? கர்நாடகத்தில் சிவக்குமாரை சுற்றி, அல்லது கேரளத்திலோ இப்படியிருக்கிறதா? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படியொரு நிலை?

    விஜய்யை சுற்றியிருப்பவர்கள் யார், அவர்களுடைய பின்னணி என்ன என்பதை பார்க்க வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நேரடியாக முதலமைச்சருடன் தொடர்புகொண்டு செயல்பட முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது. எல்லாமே சிலர் வழியாகத்தான் நடப்பதாகத் தெரிகிறது.

    Advertisement

    உளவுத்துறையின் ரகசிய அறிக்கைகள்

    உளவுத்துறையின் ரகசிய அறிக்கைகள் தினமும் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்திலிருந்து முதலமைச்சருக்கு செல்லும். அந்த தகவல்கள் முதலமைச்சருக்காக மட்டுமே. ஆனால், இப்போது அந்த அறிக்கைகளை வேறு சிலரிடம் கொடுக்க சொல்வதாகத் தெரிகிறது. இதனால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

    ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி போன்றவர்கள் யார்? சந்திரபாபு நாயுடுவுடன் சென்று நிற்பவர்கள் யார்? இதையெல்லாம் பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றி தமிழ்நாட்டில் யார் பேசுகிறார்கள்? சீமான், வேல்முருகன் போன்றவர்கள்தான் பேச வேண்டும். ஆனால், அவர்கள்கூட பேசவில்லை. ஏன் என்று புரியவில்லை.

    Advertisement

    வேல்முருகன் எழுப்பிய கேள்வி

    வேல்முருகன் ஏற்கனவே சில அதிகாரிகளின் நியமனங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஸ்டாலின் ஆட்சியிலேயே இதுபோன்ற நியமனங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, இப்போது நடக்கும் விஷயங்கள் குறித்து ஏன் பேசவில்லை என்ற கேள்வி எழுகிறது.

    பரந்தூர் விமான நிலையத் திட்டத்தையும் இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கான அழுத்தம் எங்கிருந்து வந்தது? மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. பரந்தூர் திட்டத்தை கைவிட்டால், அங்கே செய்ய வேண்டிய முதலீடுகள் என்னவாகும்? ஏற்கெனவே ஒரு பெரிய விமான நிலையம் இருக்கும்போது, இந்த முடிவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்.

    Advertisement

    விஜய் வந்ததிலிருந்து அவருடைய தெலுங்கு அடையாளம் குறித்த விவாதங்களும் அதிகமாகியிருக்கின்றன. தனுஷ், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் போன்றவர்களும் வெவ்வேறு வழிகளில் மக்களிடம் செல்வாக்கைப் பெறுகிறார்கள். இப்படி ஐந்தாறு பேர் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

    ஆந்திராவில் அரிசி, மின்சாரம்

    ஆந்திராவில் அரிசி கிடைத்தால் அங்கிருந்து வாங்குகிறோம். அதற்காக தமிழ்நாட்டு பணம் அங்கே செல்கிறது. அந்த பணத்தை இங்கேயே நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே? மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.35 கொடுத்து வாங்குவதாகவும் சொல்கிறார்கள். அதிகாரிகள் இதையெல்லாம் முதலமைச்சரிடம் சொல்லியிருக்க மாட்டார்களா? அப்படியிருக்கும்போது ஏன் இந்த நிலை?

    திமுகவை அவசரப்பட்டு கூட்டணியிலிருந்து காங்கிரசார் விலக்கிவிட்டார்கள். காங்கிரஸால் திமுக ஆதரவு இல்லாமல் செல்ல முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. மாணிக்கம் தாக்கூர் போன்றவர்கள் திமுகவை விமர்சிக்கிறார்கள். ஒரு எம்பி இடத்தைப் பாதுகாத்துக்கொண்டு புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைக்கிறார்கள்.

    Advertisement

    மம்தா, லாலு பிரசாத்

    காமராஜருக்கு பிறகு மாநில கட்சிகள்தான் தமிழ்நாட்டின் கல்வி, வளர்ச்சி, மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. பாமக இருந்ததால்தான் ஏ.கே.மூர்த்தி, வேலு போன்றவர்கள் அமைச்சர்களாக வந்தார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டில் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றுவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இல்லாவிட்டாலும், இன்னும் மீட்டர் கேஜ் பாதைகளிலேயே பயணம் செய்து கொண்டிருந்திருப்போம்.

    மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் ரயில்வே அமைச்சர்களாக இருந்தபோது அவர்களுடைய மாநிலங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு ரயில் திட்டத்துக்கு ரூ.1000 கோடி தேவை என்றால், அதற்காகக் குரல் கொடுத்தால்தான் நிதி கிடைக்கும். மாநிலக் கட்சிகளின் பங்களிப்பை மறுக்க முடியாது. இந்தியாவில் ஆட்சி நிர்வாகம் இப்படித்தான் நடக்கிறது" என்றெல்லாம் தெரிவித்தள்ளார்.

    English Summary

    Chandrababu Naidu, BJP Link? Vijay’s Telugu Circle and Why Velmurugan Is Silent