முதல்வர் பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் அனுமதி
குடலிறக்க அறுவைக்சிகிச்சைக்காக முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அறுவைச்சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு ஊரடங்கு, ஞாயிறு கிழமை லாக்டவுன் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி தற்போது அறுவைச்சிசிக்சை முடிந்து நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளால் அறுவை சிகிச்சையை முதல்வர் பழனிசாமி ஒத்திப்போட்ட நிலையில் தேர்தல் முடிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவைச்சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிச்சாமி நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது












Click it and Unblock the Notifications