72 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெறும் காங்கிரஸ்! 2 மினிஸ்டர்கள் யார்? விவரம்!
சென்னை: விஜய் பெரும்பான்மையை நிரூபித்திருக்கும் நிலையில், அவரை முதலமைச்சராக ஆளுநர் நியமித்திருக்கிறார். இதனையடுத்து நாளை காலை விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்கிறார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். அடுத்த சில நாட்களில் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளை ஓரம் கட்சி, தவெக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு கொடுத்திருக்கிறது.

இதில் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்திருக்கிறது. அப்படியெனில் அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அர்த்தம். காங்கிரஸுக்கு மொத்தம் 5 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதில் 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ராஜேஷ்குமாருக்கும்,பெ. விஸ்வநாதனுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நாளை காலை 10 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்கிறார்.
- பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்
- விளையாட்டு துறை, மது விலக்கு - ஆதவ் அர்ஜுனா
- நகராட்சி நிர்வாகம் - புஸ்ஸி ஆனந்த்
- மின்சாரத்துறை - நிர்மல்குமார்
- ஆதிதிராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்
- சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா
- பத்திரப்பதிவு, வணிகவரி - அருண்ராஜ்
- பள்ளிக்கல்வித்துறை - வெங்கடரமன்
என 9 துறைகளுக்கு அமைச்சர்கள் நாளை பதவியேற்றுக்கொள்கின்றனர். இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க மாட்டார்கள். அவர்கள் உட்பட மற்ற துறைகளுக்கான அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றால், அது தமிழக அரசியல் வரலாற்றி பெரிய திருப்பமாக அமையும்.
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி கடைசியாக ஆட்சி அதிகாரத்தில், அமைச்சரவையில் பங்கேற்றது 72 ஆண்டுகளுக்கு (1963 - 1967) முன்புதான். 1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக வெற்றி பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதன் பிறகு இன்று வரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் தனியாகவோ அல்லது கூட்டணியில் அமைச்சரவையில் பங்கேற்றோ ஆட்சி செய்ய முடியவில்லை.












Click it and Unblock the Notifications