இலவச பஸ் பயணம் பெண்களுக்கு.. கேரளாவில் யுடிஎஃப்-ன் இந்திரா கேரண்டி ஷாக்.. அடிமாட்டு விலைக்கு பஸ்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF) கூட்டணி "இந்திரா கேரண்டி" என்ற திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.. இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு தற்போது கேரளாவில் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF) கூட்டணி "இந்திரா கேரண்டி" என்ற திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.. இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

keral bus

பெண்களுக்கு அரசு பஸ்கள்

இந்த அறிவிப்பு தற்போது கேரளாவில் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தனியார் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்படும் என கவலை தொற்றிக் கொண்டுள்ளது.

யுடிஎஃப் கூட்டணியின் இந்தத் தேர்தல் வாக்குறுதி குறித்து அகில கேரள பேருந்து உரிமையாளர்கள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி. கோபிநாதன் பேசுகையில், இது போன்ற அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகள் தங்களைப் போன்ற உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள்

ஏற்கனவே அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்ட இத்தகைய திட்டத்தால் அங்குள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் நிலைகுலைந்து போயிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்..

கர்நாடகாவில் சுமார் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி முதலீடு செய்த உரிமையாளர்கள், போதிய வருமானமின்றி தவிக்கிறார்கள்.. வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல், தங்களது பேருந்துகளை 10 அல்லது 15 லட்சம் ரூபாய்க்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநில போக்குவரத்து

கர்நாடகாவில் ஏற்பட்ட அதே நிலை கேரளாவிலும் உருவாகக்கூடும் என உரிமையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.. கேரளாவை பொறுத்தவரை அரசுப் போக்குவரத்து நிறுவனமான கே.எஸ்.ஆர்.டி.சி 3,500 பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது.. ஆனால், 9,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளே மாநிலத்தின் பெரும்பாலான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன..

புள்ளிவிவரங்களின்படி, தினமும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகளில் 70,000-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.. மீதமுள்ளவர்களில் அதிகமானோர் சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் மாணவர்கள். இப்போது பெண்களுக்கு இலவசப் பயணம் அமல்படுத்தப்பட்டால், பல குடும்பங்கள் அரசுப் பேருந்துகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கும் என உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு

இதனால் தனியார் பேருந்துகளுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது.. ஏற்கனவே டீசல் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகளால் தத்தளிக்கும் தனியார் பேருந்துத் துறை, இத்திட்டம் வந்தால் மேலும் நெருக்கடியில் சிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்..

தேர்தலை கருத்தில் கொண்டு இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக உரிமையாளர்கள் குற்றம்சாட்டினார்கள்.. மக்கள் நலத் திட்டங்கள் ஒரு தரப்பின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசு ஒருவேளை இத்திட்டத்தைக் கொண்டுவந்தால், நஷ்டத்தைச் சந்திக்கப்போகும் தனியார் பேருந்துத் துறைக்கு எனத் தனியாக சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. இந்த விவகாரம் தற்போது கேரள அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+