சென்னை: கோல்டு லோன் பற்றின செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. வங்கியில் பணத்தை போட்டு வைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கி பெஸ்ட் சாய்ஸ்.. இப்போது அங்கு டெபாசிட் செய்யும் பணத்துக்கு ஆண்டுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. அதுவும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக வட்டி வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில், தங்க நகைக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதிலும் புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகளை பொறுத்தவரை கூட்டுறவு வங்கிகள் முக்கியமான பங்கை வகிக்கின்றன.
பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்படுகின்றன. விவசாயத் தேவைகள், தொழில் மற்றும் குடும்பத்தின் அவசர தேவைகள் என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் இந்த கடன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், தங்கத்தை அடமானம் வைத்து அவசரமாக பணம் பெற வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கும் நகைக்கடன் ஒரு தவிர்க்க முடியாத ஆப்ஷனாக உள்ளது.. அதேசமயம், கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான நிதி எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியும் இருக்கிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து வைப்பு தொகை திரட்டப்படுகிறது. அதாவது, மக்கள் தங்களிடமுள்ள சேமிப்பு பணத்தை கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள்.,, அதற்கு வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, தேவையானவர்களுக்கு பல்வேறு கடன்களாக வழங்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், கூட்டுறவு நிறுவனங்கள் "நபார்டு" எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடமும் கடன் பெறுகின்றன. இதுபோன்ற பல்வேறு வழிகளில் நிதியை திரட்டி, விவசாயம் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப கடன் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் வைப்பு தொகைக்கு வழங்கப்படும் வட்டி தொடர்பாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வைப்பு தொகைக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகையும் உள்ளது... அதன்படி, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்துடன் சேர்த்து கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதனால், கூட்டுறவு வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வட்டி விகிதத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும். இதேபோல், நகைக்கடன் பெறுபவர்களுக்கும் ஒரு முக்கியமான விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் அல்லது அந்த தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என்ற இரண்டில் எது குறைவோ, அந்த தொகையே கடனாக வழங்கப்படும். அதாவது, தங்கத்தின் எடை மட்டும் பார்த்து கடன் தொகை நிர்ணயிக்கப்படாது. தங்கத்தின் மார்க்கெட்டிங் மதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்... இந்த புதிய வரம்பின் அடிப்படையிலேயே ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் நகைக்கடன் தொகை முடிவு செய்யப்படும். இதனால், ஒருபக்கம் கூட்டுறவு வங்கிகளில் பணத்தை சேமிக்கும் மக்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி, மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.25 சதவீத வட்டி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபக்கம் நகைக்கடன் பெறுபவர்களுக்கும் கடன் தொகை நிர்ணயிப்பதற்கான புதிய வரம்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது...!!தமிழக கூட்டுறவு வங்கி
நகைக்கடன், பயிர்க்கடன்
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகை
0.25 சதவீத வட்டி குட்நியூஸ்