40 லட்சம் குடும்பங்கள் ஷாக்.. மோடியின் அறிவிப்பு.. கண்ணுக்கு தெரியாத பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது!
பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு சுருக்கமான வேண்டுகோள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுங்கள்" என்று அறிவுறுத்தியது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
இந்த ஒரு அறிவிப்பு மட்டுமே நகைத் தொழில் துறையில் 40 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பை குறைக்க உள்ளதாகவும் தரவுகள் கூறுகிறது.

மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தம்
ஈரான் போர் மூலம் ஒருவான எரிபொருள் நெருக்கடி காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டு, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில் தங்க இறக்குமதியை குறைக்க வேண்டிய அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
2026 நிதியாண்டில் சுமார் 72 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாகும். தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் நிறுத்தினால், இந்தியாவின் டாலர் வெளியேற்றம் பல பில்லியன் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வெளிநாட்டு செலவுகளை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் என்று அரசு தரப்பு நம்புகிறது.
ஆனால் மோடியின் அறிவிப்பின் எதிரொலி, சந்தையில் மிகவும் மாறுப்பட்ட நிலையில் எதிரொலித்துள்ளது.
40 லட்சம் பேரின் வாழ்வாதாரம்
நகைத் தொழில் இந்தியாவின் மிகப் பெரிய தொழில்களில் ஒன்று. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். பிரதமர் மோடி தங்க நகை வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தவிர்க்குமாறு கூறியதால், இந்தத் துறையில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் எப்படி பாதுகாக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களுக்காக தங்கம் வாங்கும் பழக்கம் குறைந்தால், நகை கடைகள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய சிறு தொழில்களில் பணியாற்றும் லட்சக்கணக்கானோருக்கு, தங்க நகை ஏற்றுமதி செய்வோர், நகை கடை தாண்டி வர்த்தகம் செய்வோர், மொத்த வியாபாரிகள் என பல தரப்பினர் வருமான இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தத் துறை இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இருப்பதால், மோடியின் இந்த சிறு அறிவிப்பு நாட்டின் ஒரு தரப்பு மக்களை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பலர் அஞ்சுகின்றனர்.
நகை நிறுவன பங்குகள் கடும் சரிவு
பிரதமரின் அறிவுறுத்தல் வெளியான உடனேயே பங்குச் சந்தையில் நகைத் துறை நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த சரிவு தொடர்ந்தது. டைட்டன் கம்பெனியின் பங்கு விலை அதிகபட்சமாக 6.4 சதவீதம் வரை குறைந்தது. கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் 8.3 சதவீதம், ஸ்கை கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 12.2 சதவீதம், சென்கோ கோல்டு 10.7 சதவீதம், பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் 7 சதவீதம், பி.சி. ஜுவல்லர் 5 சதவீதம், திரிபோவந்தாஸ் பிம்ஜி ஜவேரி 6.3 சதவீதம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கமயில் ஜுவல்லரி 6 சதவீதம் வரை இறங்கின.
இந்த சரிவு உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. பல சாதாரண மக்கள் தங்கள் சேமிப்பை இந்த பங்குகளில் முதலீடு செய்திருந்ததால், இந்த வீழ்ச்சி அவர்களின் நிதி நிலையை பாதித்திருக்கும்.
தங்கம் நகை மட்டும் அல்ல:
பிரதமரின் அறிவுறுத்தல் தங்கத்தை வெறும் நகைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாகக் தெரிகிறது. உண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி இன்று பல உற்பத்தித் துறைகளில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, செமிகண்டக்டர் சிப்கள், சோலார் பேனல்கள் மற்றும் பி.சி.பி. போர்டுகள் போன்றவை தயாரிப்பதில் தங்கம் மற்றும் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த உலோகங்கள் இல்லாமல் இந்தத் தொழில்நுட்ப உற்பத்திகளின் தரம் மற்றும் செயல்திறன் குறையும். எனவே தங்க இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கை இந்தத் துறைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த ஒரு அறிவிப்பு நாட்டின் அன்னிய செலவணி கையிருப்பை குறைக்க உதவும் என்றாலும், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் முதலீட்டாளர்கள் பாதிப்பு ஆகியவை இப்போது முக்கிய பேச்சாக மாறியுள்ளன.












Click it and Unblock the Notifications