Advertisement

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா


சென்னை: பெட்ரோல், டீசல் கடந்த 4வது நாளாக எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.43,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.75ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

Advertisement
Advertisement

ஜூன் மாதம் முதல் உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டியது. இந்தியாவின் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நாடாளுமன்றத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலித்தது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. பின்னர் சில நாட்களில் பெட்ரோல்,டீசல் விலை குறைந்தது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

கடந்த வாரத்தில் விலை குறைந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

Petrol and diesel rates across the country remained unchanged on Monday. The prices of the two essential fuels have now been kept unchanged for 4 straight days.
Read more...