விஜய் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தி! கூட்டணி தலைவர்கள் உற்சாகம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த விழாவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வந்திருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கூட்டணியி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக பதவியேற்கிறார். ஆளுநர் இன்னும் சற்று நேரத்தில் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், முதல் ஆளாய் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது.
காங்கிரஸ் (5), சிபிஎம் (2), சிபிஐ (2), விசிக (2), ஐயுஎம்எல் (2) என மொத்தம் 13 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க ராகுல் காந்தி, சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றிருக்கின்றனர்.
முன்னதாக தேர்தல் பரப்புரையின்போது தமிழகம் வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் சென்றுவிட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் பதவியேற்புக்கு ராகுல் காந்தி வந்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்த விழாவில் கூட்டணி தலைவர்கள் தவிர தமிழிசை சௌந்தரராஜன் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், த்ரிஷா உள்ளிட்ட திரை துறையினர் என பலரும் விழாவில் பங்கேற்றிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications