அடுத்த தமிழக பாஜக தலைவர்.. ரேஸில் வினோஜ் பி செல்வம், ஆனந்தன் அய்யாசாமி, அஸ்வத்தாமன்?

  • சென்னை: தமிழக பாஜகவின் அடுத்த தலைவருக்கான ரேஸில் வினோஜ் பி செல்வம், ஆனந்தன் அய்யாசாமி மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் இணைய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜகவின் இளம் நிர்வாகியான வினோஜ் பி செல்வம் இந்த பட்டியலில் இணைந்ததற்கு, மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    மத்திய அமைச்சரவையில் இருந்து எல்.முருகன் விடுவிக்கப்பட்ட பின், தமிழக பாஜக வட்டாரம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. எல்.முருகனின் இடத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து ஒருவர் கொண்டு வரப்படலாம் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் நயினார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனிடையே தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களில் சறுக்கியது எப்படி என்பதையும், மண்டல வாரியாக பாஜகவுக்கு விழுந்த வாக்குகள் தொடர்பாகவும் டேட்டாவை எடுத்து வருகிறார்.

    சென்னையில் இருந்து கொண்டு ராம் மாதவ் பிரத்யேக குழு கொண்டு இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் தமிழக பாஜகவில் இருக்கும் சிக்கல்கள், உட்கட்சி பூசல், நிர்வாகிகள் அடாவடிகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக பாஜகவின் அடுத்த தலைவருக்கான ரேஸ் சூடுபிடித்திருக்கிறது.

    Advertisement
    எல்.முருகன் விஷயத்தில் இன்னும் சஸ்பென்ஸ்.. தமிழக பாஜக தலைவரா? வானதி சீனிவாசன் சொன்ன அந்த விஷயம்

    ஏற்கனவே எல்.முருகன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பொறுப்புகளில் இருந்துவிட்டதால், வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அண்மையில் வானதி சீனிவாசன் ஆந்திர பாஜகவின் மேலிட இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனால் இளம் நிர்வாகிகள் சிலரின் பெயர்கள் அடிபட தொடங்கி இருக்கிறது.

    குறிப்பாக வினோஜ் பி செல்வம், ஆனந்தன் அய்யாசாமி, அஸ்வத்தாமன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் வினோஜ் பி செல்வம் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் தங்களின் தொடர்புகள் மூலமாக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆனந்தன் அய்யாசாமியும் பாஜக தலைமையை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்னும் சில மாதங்களில் தீவிரம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Race for TN BJP President: Vinoj P. Selvam, Anandan Ayyasamy, and Aswathaman in Contention