Sengottaiyan: வெளியானது அமைச்சரவை பட்டியல்.. 4வது இடத்தில் செங்கோட்டையன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று
முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளனர். இதில் தெவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் பெயர் நான்காவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

TVK Cabinet Minister Sengottaiyan

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் விஜய்யுடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொருளாளர் வெங்கட்ராமன், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார், செய்தி தொடர்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் டிகே பிரபு, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகியோரும் அமைச்சரவை பட்டியலில் உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. இதில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோரின் பெயர்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

செங்கோட்டையனின் பெயர் நான்காவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. வெங்கட்ராமன் உள்ளிட்ட மற்றவர்களின் பெயர் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட பட்டியலில் செங்கோட்டையன் பெயர் 4ஆம் இடத்தில் இருந்ததா அல்லது ஆளுநர் மாளிகை வெளியிட்ட பட்டியலில் அவ்வாறு பட்டியல் தயார் செய்தார்களா என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+