ஸ்டாலின் காட்டிய அந்த ஒரு சிக்னல்.. வரிசையாக நின்ற கூட்டணி தலைவர்கள்.. விஜய்க்கு செம சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலவிய அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தனது கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.. இதனைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக இருக்கும் வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்..

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

Stalin

ஆனால், மெஜாரிட்டி இல்லாமல் இருந்த நிலையில், 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் மற்றும் தலா விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது.

தவெக ஆட்சி அமைக்கிறது

இதனையடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். புதிதாக பதவியேற்க உள்ள அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத இக்கட்டான சூழலில், இன்னொரு தேர்தல் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த தோழமைக் கட்சிகளின் முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதேசமயம் கொள்கை ரீதியாக அவர்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார்..

ஸ்டாலின் விஜய்க்கு சொன்ன வாழ்த்து

காங்கிரஸ் கட்சி உடனடி உறவு முறிவை அறிவித்து வெளியேறிய நிலையில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சண்முகம், வீரபாண்டியன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து திமுகவுடன் கைகோர்த்துப் போராடுவோம் என அறிவித்திருப்பதை ஸ்டாலின் காட்டியிருக்கிறார்..

அத்துடன், சோதனைக் காலத்தில் உறுதுணையாக நின்ற வைகோ, பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியையும், புதிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்..

பேராசிரியர் ஜவாஹிருல்லா

அதற்கேற்றவகையில் கூட்டணி கட்சி தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழகம் சமூக நீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்திய மாநிலமாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

புதிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தமிழகத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

எங்கள் வீட்டு பிள்ளை விஜய்

அதேபோல தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சொல்லும்போதும், விஜய் எங்களுக்கு புதிது அல்ல, கேப்டனோடு வாழ்ந்தவர். எங்க பக்கத்து வீடு தான். அவருக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகள் சபாஷ்

அமையவிருக்கும் புதிய அரசு ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் அரசாகச் செயல்பட வேண்டும் எனத் தனது விழைவைத் தெரிவித்துள்ளார்.

எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், "இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் சொல்லியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் இந்த வாழ்த்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+