717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? ஷாக் கொடுக்கும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தேர்தல் பிரச்சார காலத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றும் வகையில் மதுவிலக்கை நோக்கிய முதல் பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவுக்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையால் அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tasmac Vijay loss tamil nadu cm vijay closes 717 tasmac shops tasmac shops closure near temples schools bus stands tamil nadu daily revenue loss 90 crore cm vijay first prohibition step 717 tasmac shops shut down tamil nadu tasmac revenue loss tamil nadu government vijay tasmac ban election promise 276 temples 186 schools 255 bus stands tasmac closed tamil nadu liquor shops closure impact cm vijay next action plan prohibition tamil nadu women social activists welcome tasmac closure tamil nadu alternate revenue for tasmac loss vijay government tasmac policy 2026 tamil nadu prohibition first major step tasmac shops closed near sensitive places 717 90 276 186 255

எந்தெந்த இடங்களில் உள்ள கடைகள் மூடப்படுகின்றன?

முதல்வர் விஜய் உத்தரவின்படி மூடப்படும் 717 கடைகளில் 276 கடைகள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், 186 கடைகள் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 255 கடைகள் பேருந்து நிலையங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மதுபானக் கடைகள் இருப்பது பல்வேறு சமூகப் பிரச்னைகளை ஏற்படுத்தி வந்ததால், பொதுநலன் கருதி இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்பட்டது.

அரசுக்கு தினசரி 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு?

717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வரவேற்கதக்கது, ஆனால் இந்தியாவில் பல மாநிலங்கள் மதுபான விற்பனையின் வாயிலாக தான் அரசு குறிப்பிட்டத்தக்க அளவிலான வருமானத்தை பெற்று வருகிறது. இது டெல்லி முதல் தமிழ்நாடு வரை இதை கதை தான்.

இந்த 717 கடைகள் மூடப்படுவது மூலம் தமிழக அரசுக்கு தினமும் சுமார் 26 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசின் மொத்த வருவாயில் கணிசமான பங்கை பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், முதல்வர் விஜய் இந்த இழப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ள பாராக்குரியவை. இந்த நடவடிக்கை மதுவிலக்கை நோக்கிய முதல் படியாகக் கருதப்படுகிறது.

மொத்த கடைகள் கணக்கீடு

தமிழ்நாட்டில் மொத்தம் 4765 டாஸ்மாக் கடைகள் உள்ளது, இதில் தற்போது 717 கடைகள் மூடப்படும் பட்சத்தில், சுமார் 15 சதவீத கடைகள் மூடப்படுகிறது. இதேவேளையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்-களில் சராசரி தினசரி வருவாய் 150 கோடி, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலத்தில் 200-250 கோடி ரூபாய் வரையில் வர்த்தகமாகும்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது தினசரி வருவாயில் 15 சதவீத வருவாய் பாதிக்கப்படும் பட்சத்தில், தினமும் 25-27 கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும். வருடத்திற்கு கிட்டத்தட்ட 9500 கோடி ரூபாய் (9490 கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும். இதில் +/-10 சதவீதம் கடைகளின் வருவாய் அடிப்படையில் மாறுபாடு இருக்கலாம்.

மாற்று இடங்கள் ஒதுக்கப்படுமா?

தற்போது மூடப்பட்ட 717 கடைகளுக்கும் மாற்று இடங்கள் ஒதுக்கப்படுமா என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது. இல்லையெனில் மூடப்பட்ட 717 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கையில் இருந்து குறைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்படுமா என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.

வருவாய் உருவாக்கத்திற்கு மாற்று வழிகள்

அடுத்த முக்கியமான விஷயம் தினமும் 90 கோடி ரூபாய் இழப்பை எப்படி விஜய் தலைமையிலான அரசு சரி செய்யப்போகிறது. இதற்கான மாற்று வருவாய் ஈட்டும் வழிகள் என்ன? 200 யூனிட் மின்சாரம் மூலம் 1750 கோடி ரூபாய் அளவிலான செலவுகள் உருவாகியுள்ளது, இதற்கிடையில் தினமும் 90 கோடி ரூபாய் அளவுக்கான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புதிய வருவாய் ஈட்டும் வழிகளை முதல்வர் விஜய் வேகமாக உருவாக்க வேண்டும்.

நிதி நிலை மேம்பாட்டால் மட்டுமே தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி மிகுந்த மாநிலாக வைத்திருக்க முடியும்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

முதல்வர் விஜய்-யின் இந்த அதிரடி ஆக்‌ஷன் இல்லத்தரசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனே முக்கியம் என்று முதல்வர் விஜய் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்த முடிவு அவரது தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+