குட்நியூஸ்! ஐடி ஊழியர்களே மூட்டை முடிச்சு கட்டி ரெடியா இருங்க.. 60 லட்சம் பேருக்கு Work From Home!

Subscribe to Oneindia Tamil

மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கு வரும் எரிபொருள் சப்ளை குறைந்துள்ளது, இதேபோல் சேமிப்பு கிடங்கில் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக ஆபத்து காலக்கட்டத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்ட எண்ணெய்யை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் நிலை வரும் என அச்சம் நிலவுகிறது.

எனவே மோடி, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு மீண்டும் Work From Home நடைமுறையை அமல்படுத்தலாம் என பிரிந்துரை செய்தார்.

IT TCS infosys work from home work from home it sector india 2026 modi appeal revive wfh it employees nites demand wfh 58 lakh workers it employees fuel saving work from home bengaluru chennai hyderabad wfh petrol diesel conservation it industry nasent information technology employees senate mansukh mandaviya wfh request middle east crisis it work from home it sector remote work fuel crisis 58 lakh ites employees wfh modi hyderabad speech work from home it hubs traffic fuel saving wfh ready to shift home it employees india fuel conservation mode it sector WFH NITES 58 WFH WFH 58 WFH NITES

இதை தொடர்ந்து இந்தியாவின் IT மற்றும் ITES துறையில் பணிபுரியும் சுமார் 58 லட்சம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை மீண்டும் கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஆலோசனை வெளியிட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப ஊழியர் அமைப்பான NITES எனப்படும் Nascent Information Technology Employees Senate கோரிக்கை வைத்துள்ளது.

பிரதமர் மோடியின் கோரிக்கை

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார நலனுக்காக மக்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த Work From Home முறைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மோடியின் பேச்சை தொடர்ந்து, ஐடி துறையிலும் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறைப்படுத்த ஆலோசனைகள் ஊழியர்கள் மத்தியிலும், நிர்வாகங்கள் மத்தியிலும் விவாதம் வேகமடைந்துள்ளது.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், NITES அமைப்பு முக்கியமான வாதங்களை முன்வைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் IT துறை எந்த பெரிய பாதிப்பும் இல்லாமல் Work From Home முறையில் செயல்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

IT துறையில் பல பணிகளை தொலைதூர முறையில் திறம்பட மேற்கொள்ள முடியும் என்பது கொரோனா காலத்திலேயே நிரூபிக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இது சாத்தியமான நடைமுறை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம்

நகர்ப்புறங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் தினமும் பல மணி நேரங்கள் அலுவலகத்திற்கு பயணம் செய்கின்றனர். இதனால் எரிபொருள் பயன்பாடு மட்டுமல்லாமல் நகர போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது என்று ஊழியர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கியமாக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே மற்றும் குருகிராம் போன்ற IT நகரங்களில் தினசரி அலுவலக போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக. Work From Home நடைமுறை அமல்படுத்தப்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இது தேசிய அளவிலான எரிபொருள் சேமிப்பு முயற்சிக்கு பெரிய அளவில் உதவும்.

அனைத்தையும் விட முக்கியமாக மற்ற துறைகளை காட்டிலும் ஐடி துறையால் Work From Home மற்றும் ரிமோட் வொர்க் முறையில் எளிதாகவும் இயங்க முடியும், வேகமாகவும் மாறிக்கொள்ளவும் முடியும்.

இதனால் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா விரைவில் NITES அமைப்பின் மனுவுக்கு பதில் அளிப்பார். இந்த பதிலில் வொர்க் ப்ரம் ஹோம் நிலைப்பாடு தெரிந்துவிடும். எனவே ஐடி ஊழியர்களே மூட்டை முடிச்சு கட்டி ரெடியா இருங்க, சொன்ன உடன் சொந்த ஊருக்கு போகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+