மோடி கொடுத்த ஷாக்.. ராஜ்நாத் சிங் கொடுத்த பதில்.. பெட்ரோல், டீசல், எல்பிஜி உண்மை நிலை என்ன?
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இப்போதைக்கு மிகவும் வலுவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் நேற்று மக்களை பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதை குறைக்க கூடிய நிலையில், மத்திய அரசு இன்று அப்படி என்ன சொல்லியிருக்கிறது..?
மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் வரலாறு காணாத வர்த்தக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா அத்தியாவசிய எரிபொருள் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 5-வது அனைத்து அமைச்சர்கள் குழு (IGoM) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலகளாவிய எரிசக்தி சந்தையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் எரிபொருள் விநியோகம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு, 60 நாட்கள் இயற்கை எரிவாயு இருப்பு மற்றும் 45 நாட்கள் எல்பிஜி (சமையல் எரிவாயு) இருப்பு ஆகியவற்றை கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
அரசின் உத்தரவாதம்
உலகின் பல நாடுகள் தங்கள் உள்நாட்டு எரிபொருள் நுகர்வை கணிசமாகக் குறைக்கும் அவசர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தியா எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக அரசு இக்கூட்டத்தின் மூலம் மக்களுக்கு செய்தி சொல்கிறது.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி ஆகிய முக்கிய எரிபொருள்களின் "ரோலிங் ஸ்டாக்" (தொடர் இருப்பு) போதுமான அளவு இருப்பதால், விநியோகம் தடையின்றி தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடியின் வேண்டுகோள்
இதேவேளையில் தான் நேற்று ஹைதராபாத்தில் நடத்த முக்கிய கூட்டதில் பேசிய மோடி நாட்டின் அன்னிய செலவாணியை கட்டுப்பாடுத்த மோடி 7 முக்கியமான விஷயங்களை செய்ய கோரிக்கை வைத்தார்.
1.அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் கொண்டு வருமாறு அவர் கோரினார். இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு கணிசமாகக் குறையும் என்று அவர் விளக்கினார்.
2. அதேபோல், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
3. பர்சனல் வாகனங்களுக்குப் பதிலாக பேருந்து, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், கார் பூலிங் என்று அழைக்கப்படும் வாகனங்களை பகிர்ந்து பயணிக்கும் முறையை ஊக்குவிக்குமாறும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் டாலர் இருப்பை சேமிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
4. மேலும், சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்தை சாலை வழியிலிருந்து ரயில்வேக்கு மாற்றுமாறு வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.
5. எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
6. வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, அத்தியாவசியமற்ற வெளிநாட்டு விடுமுறைகள் மற்றும் பயணங்களை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் வெளிநாட்டு நாணய செலவுகளை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் விளக்கினார்.
7. அதேபோல், தங்கம் வாங்குவதைப் பொறுத்தவரை, திருமணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக தங்க நகைகளை வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தவிர்க்குமாறு இந்திய குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.














Click it and Unblock the Notifications